CSIR UGC NET ஜூன் 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
படி 1: ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்க, அதிகாரப்பூர்வ வலைத்தளமான csirnet.nta.ac.in ஐப் பார்வையிடவும்.
படி 2: வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் "CSIR UGC NET Admit Card 2025" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
படி 4: ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
படி 5: ஹால் டிக்கெட்டின் அச்சுப்படியை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.