கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ₹73,750 சம்பளத்தில் வேலை

Published : May 03, 2025, 09:49 PM IST

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் ஆபரேட்டர், கார் ஓட்டுநர் வேலை! மே 6க்குள் விண்ணப்பிக்கவும்! ₹73,750 வரை சம்பளம்.  

PREV
15
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ₹73,750 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் 'ஏ' பிரிவு மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளம், முன்னாள் ராணுவ வீரர்களுக்காக சூப்பர் வாய்ப்புகளை அறிவித்துள்ளது. கிரேன் ஆபரேட்டர் மற்றும் பணியாளர் கார் ஓட்டுநர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திறமையான முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! வரும் மே 6-ம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
 

25

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:
பணி: கிரேன் ஆபரேட்டர் (டீசல்)

காலியிடங்கள்: 6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், டீசல் மெக்கானிக் அல்லது மோட்டார் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
 

35

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:

பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
காலியிடங்கள்: 1
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இந்த வேலைகளுக்குத் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹21,300 முதல் ₹73,750 வரை சம்பளம் வழங்கப்படும்.
 

45

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 06.05.2025 தேதியின்படி 45 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: தகுதியான நபர்கள் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்டமாக செய்முறைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் முறைக்கு ₹400 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
 

55

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://cochinshipyard.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.05.2025
உடனடியாக விண்ணப்பியுங்கள்! இந்த அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்!
 

Read more Photos on
click me!

Recommended Stories