பொறியியல் பட்டதாரிகளுக்கு கனரா வங்கியில் வேலை! கை நிறைய சம்பளம்!

First Published | Jan 9, 2025, 8:06 PM IST

Canara Bank Specialist Officer Recruitment 2025: கனரா வங்கி 60 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை.

Canara Bank Specialist Officer Recruitment 2025

பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை கிடைக்க பொன்னான வாய்ப்பு உள்ளது. கனரா வங்கி பல பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,50,000 முதல் 2,25,000 வரை சம்பளம் கிடைக்கும்.

Canara Bank Jobs

காலியிடங்கள்:

கனரா வங்கியில் மொத்தம் 60 சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர்) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE அல்லது BTech பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

Tap to resize

Canara Bank Job opportunity

தேர்வு முறை:

கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதன் பிறகு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆவண சரிபார்ப்பு செய்யப்படும். அதன் பிறகு நேர்காணல் நடைபெறும். அதன் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Canara Bank job for B.E,, B.Tech.,

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர்) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பொறியியல் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்தில் வங்கி வேலையில் சேர இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Apply online for Canara Bank Recruitment

விண்ணப்பிப்பது எப்படி?

கனரா வங்கியில் இந்த வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், கனரா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான canrabank.com க்குச் சென்று, பதிவு செய்யலாம். அதன் பிறகு, உங்களுக்கு ஒரு பதிவு எண் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி, மற்ற விவரங்களை நிரப்பவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது ஆதார் அட்டை, பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.

Canara Bank Specialist Officer

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 6-1-2025 அன்று தொடங்கியது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதி: 24-01-2025.

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி மேலும் விவரம் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கலாம்.

https://canarabank.com/pages/Recruitment-Project-1-2025-Engagement-of-Specialist-Officers-on-contract-basis

Latest Videos

click me!