படிக்கும்போதே சம்பாதிக்க நீங்க ரெடியா? காலேஜ் மாணவர்களுக்கு சூப்பர் வேலை!

First Published | Nov 19, 2024, 9:02 AM IST

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெறுவதில் பல நன்மைகள் உள்ளன. நல்ல சம்பளம், பணிப் பாதுகாப்பு, தொழில்முறை அனுபவம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கேம்பஸ் வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மாணவர்களுக்காக சில டிபஸ்.

Campus Placement

கேம்பஸ் பிளேஸ்மென்ட் என்பது கல்லூரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம். பல்வேறு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வந்து மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. பொதுவாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சில நிறுவனங்கள் இறுதியாண்டுக்கு முந்தைய மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கின்றன.

Campus Interview

12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவர்கள், கேம்பஸ் வேலைவாய்ப்பு பற்றியும் அறிந்துகொண்டு சரியான கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெறுவதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, கல்லூரியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே ஒருவருக்கு வேலை கிடைக்கும். இரண்டாவதாக, இந்த நிறுவனங்கள் அதிக சம்பளத்தையும் வழங்குகின்றன. மாணவர்கள் படிக்கும்போதே கேம்பஸ் பிளேஸ்மெண்ட் கிடைக்க சில குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Tap to resize

Campus Interview Process

கேம்பஸ் வேலைவாய்ப்பு பல கட்டங்களில் நடைபெறுகிறது. சில சந்தர்ப்பங்களில், இது 2-3 மாதங்கள் கூட நடக்கும். பொதுவாக எழுத்துத்  தேர்வு, குழு விவாதம், தனிப்பட்ட நேர்காணல் என பல கட்டங்களாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படும். கேம்பஸ் பிளேஸ்மென்ட்டின் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால், அதற்காகத் தீவிரமாக தயார் செய்ய உற்சாகம் கிடைக்கும். 

Benefits of Campus Placement

கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் மாணவர்களுக்கு பணிப் பாதுகாப்பு கிடைக்கும். பெரிய கல்லூரிகளுக்கு வரும் நிறுவனங்கள் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நல்ல சம்பளம் தருகின்றன. கல்லூரிகளே மாணவர்களுக்கு சிறந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இதனால் வேவைவாய்ப்பு மோசடிக்கு இடம் இருக்காது.

Campus Placement benefits

பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவர்களுக்கு வேலையில் சேர்வதற்கு முன்பே முறையான பயிற்சி அளிக்கின்றன. இதனால் மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்பே தொழில்முறை அனுபவம் பெற வாய்ப்பு கிடைக்கும். நெட்வொர்க்கிங் செய்வதற்கான வாய்ப்பும் பெறலாம்.

Campus recruitment

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் மாணவர்கள் உங்கள் ரெஸ்யூமை சிறப்பாகத் தயாரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு, அனுபவம் வாய்ந்த சீனியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.

Getting ready for Campus Interview

பல நிறுவனங்கள் கேம்பஸ் பிளேஸ்மென்ட்டுக்காக கல்லூரிக்கு வருகின்றன என்றால், அனைத்து நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இருந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்குத் தயாராகலாம்.

Campus Group Discussion

நண்பர்களுடன் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதம் நடத்தலாம். இது கேம்பஸ் இன்டர்வியூ சமயத்தில் விவாதங்களில் பங்கேற்க தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

Campus Interview Preparation

எந்த நிறுவனமும் கேம்பஸ் இன்டர்வியூ செயல்முறையில் இறுதியாக தனிப்பட்ட நேர்காணலை நடத்துகின்றன. இதற்கு மாதிரி நேர்காணல்கள் நடத்தி பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இது கேம்பஸ் நேர்காணலின்போது தெளிவான பதில்களைக் கூற உதவியாக இருக்கும்.

Latest Videos

click me!