மாணவர்களே! காலேஜ் கட் அடித்தாலும் பிரச்சனையில்லை! இனி முழுசா 3 வருடம் படிக்கலாம்! பல்கலைக்கழகம் போட்ட 'மாஸ்' உத்தரவு!

Published : Nov 19, 2025, 10:20 PM IST

வருகைப்பதிவு குறைவாக உள்ள  பல்கலை. மாணவர்கள், படிப்பைத் தொடரவும், விடுபட்ட தேர்வை பிறகு எழுதவும் புதிய சலுகைக்கு ஒப்புதல்.

PREV
15
Manonmaniam Sundaranar University வருகைப்பதிவு குறைவு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்களுக்குப் புதிய சலுகை!

திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU), மாணவர்களின் நலன் கருதி, வருகைப்பதிவு தொடர்பான விதிமுறைகளில் ஒரு முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது.

25
கல்விசார்ந்த நிலைக்குழுவின் முக்கியக் கூட்டம்

கடந்த நவம்பர் 18, 2025 அன்று, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 57-வது கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பதிவாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். துணை வேந்தர் பேசுகையில், பல்கலைக்கழகம் தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபடுகிறது என்று குறிப்பிட்டார்.

35
60% வருகைப்பதிவு குறைபாடு: பழைய விதி என்ன?

இதுவரை, ஒரு மாணவர் உடல்நலக் குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஒரு பருவத்தின் மொத்த வேலை நாட்களில் 60% சதவீதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு கொண்டிருந்தால், அவர் அந்தப் பருவத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார். மேலும், அவர் தவறிய அந்தத் தேர்வை மீண்டும் எழுதி முடித்த பின்னரே அடுத்த பருவத்திற்குச் செல்ல முடியும் என்ற விதி இருந்தது. இதனால், மாணவர்களின் படிப்பு இடைநிறுத்தப்படும் (Study Break) ஒரு சிரமமான சூழல் நீடித்து வந்தது.

45
மாணவர்களின் எதிர்காலத்திற்குப் புதிய நடைமுறை!

மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, பழைய விதியில் திருத்தம் செய்யப்பட்டு புதிய நடைமுறைக்கு நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின்படி, வருகைப்பதிவு குறைவு காரணமாக ஒரு பருவத் தேர்வை எழுத முடியாத இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள், கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தங்கள் படிப்பை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

55
விடுபட்ட தேர்வை எப்போது எழுதலாம்?

இளநிலைப் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள், தொடர்ந்து 3 ஆண்டுகள் படிப்பை முழுமையாக முடிக்கலாம். அதன் பின்னர், அவர்கள் விடுபட்ட குறிப்பிட்ட பருவத் தேர்வை மட்டும் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்து, அதற்கான தேர்வை எழுதலாம். இந்தச் சலுகை மாணவர்களின் படிப்பு தடைபடுவதைத் தடுக்கும் ஒரு மகத்தான முடிவாக அமைந்திருப்பதால், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும் இதனை வரவேற்றனர். இத்துடன் புதிய பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories