
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025 முடிவுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகள், கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் தனிநபர் மதிப்பெண் அட்டைகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மே மாதம் பிறந்துவிட்ட நிலையிலும் முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களைப் பெற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம்.
"தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும்" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "டி.என்.செட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது" என்று பதிலளித்துள்ளனர். ஆனால், உறுதியான தேதியை அவர்கள் தெரிவிக்கவில்லை.
தேர்வு முடிவுகள் தாமதமாவதால் விரக்தியடைந்த தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Subject: Request to Release TNSET 2024 Results or Provide an Official Update Regarding the Delay
To: trbgrievances@tn.gov.in
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
நான் முழு அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் TNSET 2024 தேர்வுக்கு எழுதிய மாணவன்/மாணவி. தேர்வு நடத்தப்பட்டு நீண்ட நாட்களாகியும், விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டும் இதுவரை முடிவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த நீண்ட தாமதம் எங்களை குழப்பத்திலும், கவலையிலும், மன அழுத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரிகளும் இந்த முடிவுகளை அடிப்படையாக வைத்துதான் தங்கள் ஆட்சேர்ப்பு மற்றும் கல்வித் திட்டமிடலை மேற்கொள்ள காத்திருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால், நாங்கள் இருளில் தவிக்கிறோம்.
ஆகவே, தயவுசெய்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்:
* TNSET 2024 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும்
* அல்லது முடிவு அறிவிப்பு தாமதத்திற்கான காரணம் மற்றும் எதிர்பார்க்கப்படும் தேதி குறித்த பொது அறிவிப்பையாவது வெளியிட வேண்டும்.
நாங்கள் நியாயமற்ற எதையும் கேட்கவில்லை - தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை மட்டுமே விரும்புகிறோம். எங்கள் எதிர்கால மற்றும் தொழில் திட்டங்கள் நிலுவையில் உள்ளன, மேலும் அதிகாரிகள் எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு விரைவில் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இன்னும் இந்த அமைப்பை நம்பும் ஒரு மாணவனின்/மாணவியின் உண்மையான வேண்டுகோளாக இதை கருத்தில் கொள்ளவும்.
நன்றி,
உண்மையுள்ள,
[உங்கள் முழு பெயர்]
[TNSET பதிவு எண் - விருப்பத்திற்குரியது]
[நகரம்/மாவட்டம்]
ஒரு TNSET தேர்வர்"
இதுபோன்ற மின்னஞ்சல்களை ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் அனுப்பியுள்ளதால் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஷாக்கில் உள்ளதாம்
இந்த மின்னஞ்சல் மூலம் தேர்வர்களின் மனக்குமுறலை நாம் உணர முடிகிறது. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகளை வெளியிட்டு, உதவி பேராசிரியர் கனவுகளுடன் காத்திருக்கும் தேர்வர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கும் என்று நம்புவோம். தொடர்ந்து புதிய தகவல்களுக்காக காத்திருப்போம்!