சென்னை பல்கலைக்கழகம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க, தனது உயிர்நாடியான 'கார்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உடைக்க முடிவெடுத்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "இது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்" என்றும், "அரசின் பொறுப்பற்ற தனம்" என்றும் சமூகப் போராற்றத்திற்கான மாணவர், பெற்றோர் மற்றும் குடிமக்கள் கூட்டு இயக்கம் (SPCSS-TN) கடுமையாகச் சாடியுள்ளது.
அரசின் பிச்சை தேவையில்லையா?
இந்த விவகாரம் குறித்து SPCSS-TN பொதுச்செயலாளர் P.B. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை அனலைக் கக்கியுள்ளது. "சென்னை பல்கலைக்கழகம் அரசிடம் பிச்சை எதுவும் கேட்கவில்லை. ஆனால், சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பல்கலைக்கழகத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைக்கும் துரோகச் செயல்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அரசு செய்ய வேண்டிய நிதியுதவியை மறுப்பது மற்றும் பல்கலைக்கழகத்தின் சேமிப்பைக் கரைப்பது, இறுதியில் யாரைப் பாதிக்கும் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.