715 கி.மீ ரேஞ்ச், 1156 hp பவர்: நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் மிரட்டலான 5 எலெக்ட்ரிக் கார்கள்!

Published : Oct 31, 2026, 04:36 PM IST

நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்கள்! மெர்சிடிஸ் பென்ஸ் GLC எலெக்ட்ரிக், டென்ஸா D9, JSW காம்பேட் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

PREV
15
நவம்பர் புதிய கார்கள் 2026

கடந்த 2 மாதங்களாகப் பண்டிகைக் காலத்தையொட்டி பல்வேறு புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வரவிருக்கும் நவம்பர் மாதத்திலும் பல புதிய கார் மாடல்கள் இந்தியச் சந்தையில் வரிசைகட்டி நிற்கின்றன.

இந்த நவம்பர் மாதப் பட்டியலில் பிரீமியம் மற்றும் சொகுசு ரகக் கார்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ், பிஒய்டி நிறுவனத்தின் 'டென்ஸா' பிராண்ட் கார்கள் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனங்களின் புதிய மாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. நவம்பரில் அறிமுகமாக உள்ள முக்கியக் கார் மாடல்களின் முழு விவரங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

25
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எலெக்ட்ரிக் (Mercedes-Benz GLC Electric)

சொகுசு கார் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்சி எலெக்ட்ரிக் மாடல் நவம்பர் 4 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.80 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை

சிறப்பம்சங்கள்:

94kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. முழுமையாகச் சார்ஜ் செய்தால் சோதனை தரவுகளின்படி 715 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இதில் உள்ள 2 மின்சார மோட்டார்கள் 490 hp பவரையும், 800 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆல்-வீல் டிரைவ் (AWD) சிஸ்டம் இதில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

35
டென்ஸா டி9 & இசட்9 ஜிடி (Denza D9 & Z9 GT)

சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான டென்ஸா (Denza), நவம்பர் 13 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்நாளில் 'டென்ஸா டி9' மற்றும் 'டென்ஸா இசட்9 ஜிடி' ஆகிய 2 மாடல்கள் களம் காணுகின்றன.

டென்ஸா டி9 (D9):

பெரிய குடும்பங்களுக்கான சொகுசு எம்பிவி (MPV) மாடலான இதில் 103kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்புற மின்சார மோட்டார் 313 hp பவரையும், 360 Nm டார்க் திறனையும் வழங்கும். சர்வதேச WLTP கணக்கீட்டின்படி, ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் சுமார் 520 கி.மீ வரை செல்லக்கூடியது.

டென்ஸா இசட்9 ஜிடி (Z9 GT):

ஸ்போர்ட்டியான 'ஷூட்டிங் பிரேக்' ரக எலெக்ட்ரிக் மாடலான இதில் 122.5kWh பேட்டரி மற்றும் மூன்று மின்சார மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 1,156 hp பவரை வெளிப்படுத்தும். WLTP தரவுகளின்படி 600 கி.மீ ரேஞ்ச் கொண்ட இந்த மாடல், ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

45
ஜே.எஸ்.டபிள்யூ காம்பேட் (JSW Combat)

ஸ்டீல் மற்றும் சிமென்ட் துறைகளில் முன்னணியில் இருக்கும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனம், எம்ஜி மோட்டார்ஸ் பங்குகளின் பெரும்பகுதியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தற்போது சொந்த பிராண்டில் கார்களைக் களமிறக்கத் தயாராகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்த ‘செரி’ (Chery) வாகன நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள ஜேஎஸ்டபிள்யூ, செரியின் 'ஜேட்டூர் டி2' (Jetour T2) மாடலை ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யவுள்ளது. இக்கார் நவ.15 அன்று இந்தியாவில் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Toyota Innova Hycross Facelift)

இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் நவ.26 அன்று அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.20 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).

மாற்றங்கள் & சிறப்பம்சங்கள்:

முன்பக்க வடிவமைப்பு, முகப்பு கிரில், ஹெட்லைட்கள் மற்றும் உட்புற வசதிகளில் (Cabin features) புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஞ்சின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும். கூடுதல் தகவலாக, E85 எரிபொருளுக்கு (Flex-Fuel) இணக்கமான மாடலும் இதில் அறிமுகம் செய்யப்படும் என ஆட்டோமொபைல் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories