
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2026-ல் அதிகம் விற்பனையான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் டிவிஎஸ் ஐகியூப் முதலிடத்தைப் பிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 45,320 ஐகியூப் ஸ்கூட்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது செப்.2025-ன் விற்பனையான 30,820 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியாகும்; அதேபோல் ஆக.2026-ல் விற்பனையான 42,882 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 6% உயர்வாகும்.
பட்டியலில் பஜாஜ் சேத்தக் 42,394 யூனிட்டுகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இது செப்டம்பர் 2025-ல் பதிவான 30,558 யூனிட்டுகளை விட 39% அதிகம் என்றாலும், முந்தைய ஆகஸ்ட் மாதத்தின் 52,248 யூனிட்டுகளோடு ஒப்பிடுகையில் 19% சரிவாகும். ஹீரோ விடா 28,862 யூனிட்டுகளுடன் 3-ம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 15,329 ஆக இருந்த இதன் விற்பனை தற்போது 88% உயர்ந்து உள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் 25,558 யூனிட்டுகளோடு ஒப்பிடும்போது 13 சதவீத மாதாந்திர வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
அடுத்தபடியாக, ஏத்தர் ரிஸ்டா 19,813 யூனிட்டுகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரின் 18,919 யூனிட்டுகளை விட 5% அதிகம்; ஆனால் ஆகஸ்ட் மாதத்தின் 22,586 யூனிட்டுகளோடு ஒப்பிடுகையில் 12% சரிவாகும். புதிய வரவான டிவிஎஸ் ஆர்பிட்டர் 17,027 யூனிட்டுகளுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் 14,641 யூனிட்டுகளோடு ஒப்பிடுகையில் 16% வளர்ச்சியைப் பெற்று உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 16 இ-மாடல்கள் மொத்தமாக 1,86,693 யூனிட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விநியோகப் பட்டியலில் ஓலா எலக்ட்ரிக் விவரங்கள் இடம்பெறாததால், பட்டியலிடப்பட்ட பிற நிறுவனங்களின் விவரங்கள் மட்டுமே இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
6-வது இடத்தில் உள்ள கிரீவ்ஸ் மேக்னஸ் 10,532 யூனிட்டுகளை விநியோகித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரை (6,179) விட 70% ஆகஸ்ட் மாதத்தை (9,772) விட 8% கூடுதலாகும். 7-வது இடத்தில் உள்ள ஏத்தர் 450 மாடல் 6,168 யூனிட்டுகளைப் பதிவு செய்துள்ளது; இது ஆகஸ்ட் மாத விற்பனையான 6,891 யூனிட்டுகளை விட 10% குறைவு (கடந்த ஆண்டு 450S, 450X, 450 அபெக்ஸ் எனத் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டதால் இம்முறை நேரடி வருடாந்திர வளர்ச்சி கணக்கிடப்படவில்லை).
8-வது இடத்தில் உள்ள ரிவர் இண்டி 6,057 யூனிட்டுகளை விநியோகித்து கடந்த ஆண்டை (1,960) விட 209% அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது; எனினும் ஆகஸ்ட் மாதத்தின் 6,567 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இது 8% குறைவாகும். 9-வது இடத்தில் உள்ள புதிய மாடலான ஏத்தர் கோனார்க், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 217 யூனிட்டுகள் மட்டுமே விற்றிருந்த நிலையில், செப்டம்பரில் 1,808% மாபெரும் வளர்ச்சியுடன் 4,140 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. 10-வது இடத்தில் உள்ள கிரீவ்ஸ் ரியோ 2,047 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் 545 யூனிட்டுகளை விட 276%, ஆகஸ்ட் மாதத்தின் 1,911 யூனிட்டுகளை விட 7% உயர்வாகும்.
பட்டியலிடப்பட்ட மொத்த விற்பனையில் முதல் 5 மாடல்கள் மட்டுமே 82.2% பங்களிப்பை கொண்டுள்ளன. பஜாஜ் சேத்தக்குடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ் ஐகியூப் தனது முன்னிலையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்த ஒரே தயாரிப்பாக ஹீரோ விடா திகழ்கிறது.
நிறுவனங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் பார்க்கும்போது டிவிஎஸ் (TVS) ஐகியூப் & ஆர்பிட்டர் ஆகிய இரு மாடல்களின் மூலம் மொத்தம் 62,347 யூனிட்டுகளை விநியோகித்து, மொத்த சந்தையில் 33.4% பங்கைத் தன்வசம் வைத்துள்ளது. பஜாஜ் (Bajaj) சேத்தக் & யூலு மாடல்கள் மூலம் 43,194 யூனிட்டுகள் விற்று 23.1% பங்கை பெற்றுள்ளது. ஏத்தர் (Ather) ரிஸ்டா, 450 & கோனார்க் மாடல்களின் மூலம் 30,121 யூனிட்டுகளை விநியோகித்து 16.1% பங்கை எட்டியுள்ளது.
ஹீரோ (Hero) விடா மாடல் மூலம் 28,862 யூனிட்டுகளை விநியோகித்து 15.5% பங்கைப் பிடித்து உள்ளது. கிரீவ்ஸ் (Greaves) மேக்னஸ், ரியோ மற்றும் நெக்ஸஸ் வழியே 13,441 யூனிட்டுகளை விநியோகித்து 7.2% பங்கைக் கொண்டுள்ளது. ரிவர் (River) இண்டி மாடல் மூலம் 6,057 யூனிட்டுகளுடன் 3.2% பங்கைப் பெற்றுள்ளது. ஹோண்டா (Honda): QC1 (1,464 யூனிட்டுகள்) மற்றும் ஆக்டிவா E ஆகிய மாடல்கள் மூலம் மொத்தம் 1,605 யூனிட்டுகளை விநியோகித்து 0.9 சதவீதப் பங்கைப் பதிவு செய்துள்ளது. இவை தவிர, சுஸுகியின் இ-ஆக்சஸ் (573 யூனிட்டுகள்) மற்றும் யமஹாவின் EC06 (493 யூனிட்டுகள்) ஆகியவை மீதமுள்ள பங்களிப்பை வழங்கியுள்ளன.
அரசாங்கத்தின் வாஹன் (Vahan) போர்ட்டல் பதிவுத் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 2.05 லட்சம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த இருசக்கர வாகனப் பதிவில் 11% ஆகும். நிறுவன வாரியான நேரடிப் பதிவுகளில் டிவிஎஸ் சுமார் 54,000 வாகனங்களையும், பஜாஜ் சுமார் 48,500 வாகனங்களையும் பதிவு செய்துள்ளன. ஏத்தர் சுமார் 30,500 வாகனங்களையும், ஹீரோ விடா சுமார் 24,300 வாகனங்களையும், ஓலா எலக்ட்ரிக் சுமார் 13,450 வாகனங்களையும் பதிவு செய்துள்ளன. மேலும், FADA வெளியிட்ட நவராத்திரி பண்டிகைக் கால தற்காலிகத் தரவுகளின்படி, பண்டிகையின் 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 75,758 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சில்லறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் பண்டிகைக் கால விற்பனையை விட 33.41% கூடுதலாகும்.