Best Budget Automatic Cars: டாடா மோட்டார்ஸின் இந்த பிரபலமான எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் (Automatic Gearbox) மற்றும் குறைந்த வேகத்தில் இலகுவாக செயல்படும்.
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு கார்களில் மட்டுமே இருந்து வந்தது. இந்த கார்கள் எல்லாம் மிக விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது மார்கெட்டில் 12 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் பல ஆட்டோமேட்டிக் கார்கள் கிடைக்கின்றன. அவற்றில் டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், கியா சோனெட் ஆகிய கார்களை விரும்புகின்றனர்.
26
டாடா பஞ்ச்
டாடா மோட்டார்ஸின் இந்த பிரபலமான எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் (Automatic Gearbox) மற்றும் குறைந்த வேகத்தில் இலகுவாக செயல்படும் ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை ஓட்டுநர் அனுபவத்தை மேலும் சவுகரியமாக்குகின்றன. ஸ்டீயரிங்கின் எடை, இருக்கை உயரம், காருக்குள் இருந்து டிரைவருக்கான முன் மற்றும் பக்கவாட்டுப் பார்வை ஆகியவை இந்த பட்டியலில் உள்ள முக்கிய காரணிகளாகும். இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ.7,54,900 ஆகும்.
36
கியா சோனெட்
கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்று பார்த்தால் அது சோனெட் தான். எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.10.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதிய எஸ்யூவி ரக மாடலான ஃபிரான்க்ஸ். இந்த காரில் 90hp மற்றும் 113Nm க்கு ஏற்ற 1.2 லிட்டர் நேச்சுரல் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. அத்துடன் கியர்பாக்ஸ் தேர்வுகளில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ஆகிய விருப்பங்கள் உள்ளன. இந்த விலை ரூ.8.55 லட்சமாகும்.
56
நிசான் மேக்னைட் ஆட்டோமேட்டிக்
இனி 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமில்லாமல், AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும் நிஸான் மேக்னைட் CNG மாடலுடன் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6,21,000 முதல் தொடங்குகிறது.
66
டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் எஸ்யூவியை வாங்க திட்டமிட்டால், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9,51,390 ஆகும்.