Tamil Actor Luxury Cars 2026: ரஜினி முதல் விஜய் வரை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் யார்? அந்த கார்களின் ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை பார்ப்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தங்களின் அந்தஸ்திற்கு ஏற்ப உலகின் மிகச்சிறந்த கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். 2026-ஆம் ஆண்டின் நிலவரப்படி, சினிமா பிரபலங்கள் வைத்திருக்கும் டாப் 5 கார்களை விரிவாக பார்க்கலாம்.
26
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan)
நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற விலை உயர்ந்த காரை வைத்துள்ளார். சொகுசு கார்களின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் SUV ரகம் இது. நடிகர் தனுஷ் தனது பிரத்யேகத் தேவைகளுக்கேற்ப இதனை வடிவமைத்துள்ளார். இதில் 6.75 லிட்டர் V12 ட்வின்-டர்போ எஞ்சின் உள்ளது. இதன் உட்புறம் ஒரு நடமாடும் அரண்மனை போலவே இருக்கும். தார் சாலைகள் மட்டுமின்றி, கரடுமுரடான பாதைகளிலும் மிக மென்மையாகச் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.10.5 கோடி முதல் ரூ.12.5 கோடி வரை இருக்கும்.
36
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost)
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் பிரியராக இருந்து வருகிறார். இவரிடம் உள்ள 'கோஸ்ட்' மாடல் அதன் அமைதியான பயணத்திற்குப் பெயர் பெற்றது. ஒரு வாகனம் சாலையில் ஓடும்போது சத்தமே கேட்காத அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் பட்டனை அழுத்தினால் தானாகவே மூடிக்கொள்ளும் வசதி கொண்டது. இந்த மாடலின் விலை ரூ.8.5 கோடி முதல் ரூ.9.5 கோடி வரை ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் STRஎனப்படும் சிலம்பரசன் ₹4.2 - ₹4.6 கோடி மதிப்புடைய லம்போர்கினி உருஸ் மாடல் காரை வைத்துள்ளனர். சூப்பர் கார்களின் வேகமும், SUV கார்களின் கம்பீரமும் இணைந்ததுதான் இந்த லம்போர்கினி உருஸ். இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இளைஞர்களின் கனவு காரான இது, தமிழ்நாட்டின் ஸ்போர்ட்ஸ் கார் சந்தையில் முதலிடத்தில் உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் மெர்சிடிஸ் மேபேக் S-கிளாஸ் மாடல் காரை வைத்துள்ளனர். இந்த காரின் விலை ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். சொகுசு மற்றும் பாதுகாப்பிற்கு மெர்சிடிஸ் மேபேக் ஒரு சிறந்த உதாரணம். இதன் பின் இருக்கைகள் விமானத்தின் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகள் போல சாய்ந்து படுக்கும் வசதி கொண்டவை. மசாஜ் செய்யும் வசதி, குளிர்சாதனப் பெட்டி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
66
பிஎம்டபிள்யூ i7 (BMW i7 - Electric)
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ₹2.15 - ₹2.75 கோடி மதிப்புடைய பிஎம்டபிள்யூ i7 கார் மாடலை வைத்துள்ளார். இது முழுமையான மின்சார சொகுசு கார் ஆகும். இதில் உள்ள 31.3 அங்குல 'தியேட்டர் ஸ்கிரீன்' பயணத்தின்போது சினிமா பார்க்கும் அனுபவத்தைத் தரும். பெட்ரோல் செலவு இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வலம் வரும் இந்த மாடல் எதிர்காலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.