ரூ.1 லட்சம் கூட இல்ல.. நடுத்தர குடும்பங்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. அட! இவ்வளவு வசதிகளா?

Published : Feb 23, 2026, 08:42 PM IST

நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்தும் இவற்றின் விலைகள் குறித்தும், என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

PREV
16
பட்ஜெட் விலையில் டாப் 5 ஸ்கூட்டர்கள்

நடுத்தர குடும்பங்களுக்கு சொகுசு வாகனம் என்றால் அது ஸ்கூட்டர்கள் தான். வேலைக்கு செல்லவும், கடை உள்ளிட்ட வணிக நோக்கங்களுக்காகவும் ஸ்கூட்டிகள் பெரும் கைகொடுத்து உதவுகின்றன. இந்த செய்தியில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

26
டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125)

டிவிஎஸ் என்டார்க் 125 மாடல் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. $124.8$ CC, 3-வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். மணிக்கு 95 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. புளூடூத் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இதில் நிறைந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் பேசிக் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.96.600 ஆகும்.

36
ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டராக வலம் வருகிறது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 55 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலின் டாப் வேரியன்ட்டில் 'ஸ்மார்ட் கீ' தொழில்நுட்ப அம்சம் உள்ளதால் சாவியை போடாமலேயே வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியும்.

 டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் அம்சம் உள்ளதால் மேடு, பள்ளங்களில் ஸ்மூத்தாக செல்ல முடியும். இந்த மாடலின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் விலை எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,378 மட்டுமே. ஆன் ரோடு விலை ரூ.97,267 ஆகும்.

46
சுஸுகி அக்சஸ் 125 (Suzuki Access 125)

ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக இருக்கும் சுஸுகி அக்சஸ் 125 மாடலில் 125cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளதால் சிறந்த பிக்கப் திறன் இருக்கும். ப்ளூடூத் வசதியை ஸ்கூட்டருடன் இணைக்கும்போது டிஸ்பிளேவிலேயே நேவிகேஷன், மிஸ்டு கால் மற்றும் மெஜேஸ் அலர்ட்களை பெற முடியும். மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. இந்த மாடலின் பேசிக் வேரியண்ட் விலை ரூ.1,02,400 ஆகும். ஆபரில் மேலும் இதன் விலையை குறைக்க முடியும்.

56
யமஹா ஃபாசினோ 125 எஃப்ஐ ஹைப்ரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid)

யமஹா ஃபாசினோ 125 எஃப்ஐ ஹைப்ரிட் மாடலின் எடை 99 கிலோ மட்டுமே இருப்பதால் பெண்கள் இந்த ஸ்கூட்டரை சுலபமாக கையாள முடியும். 125 cc, ஏர்-கூல்டு, பிஎஸ்6 இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 65 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. சிறந்த மைலேஜ் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.92,500 ஆகும்.

66
ஹீரோ சூம் 110 (Hero Xoom 110)

ஹீரோ சூம் 110 மாடலில் மற்ற ஸ்கூட்டரில் இல்லாத தனித்துவமான அம்சமான கார்னர் பெண்ட் லேம்ப்ஸ் வசதி உள்ளது. நீங்கள் வண்டியைத் திருப்பும்போது, திருப்பும் திசையில் தானாகவே வெளிச்சம் விழும். இரவு நேரப் பயணத்திற்கு இது மிகவும் பாதுகாப்பானதாகும். X-வடிவ LED விளக்குகள் தனித்துவமான தோற்றத்தை கொடுக்கின்றன. அகலமான டயர்கள் கொடுக்கப்பட்டதால் நல்ல கிரிப் கொடுக்கும். ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.86,500 ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories