நாட்டில் விலை குறைந்த கார்களுக்கு எப்பொழுதும் மவுசு குறைந்ததாக இல்லை. இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் பட்ஜெட் விலையில் நல்ல காரை வாங்க வேண்டும் என்றே கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பதிவில் விலை குறைந்த பட்ஜெட் கார்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த காரின் மைலேஜ் 35 - 43 கிமீலிட்டர் மற்றும் 216 சிசி இன்ஜின் உள்ளது
சென்னையில் பஜாஜ் க்யூட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை
சென்னையில் பஜாஜ் க்யூட்டின் எக்ஸ்-ஷோரூம் கார் விலையைப் பெறுங்கள். ஒரு காரின் ஆன்-ரோடு விலையில் நகரத்தில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை, ரூ.3,61,000ஆக உள்ளது. இந்த காரின் மைலேஜ் 35 - 43 கிமீ/லிட்டர் மற்றும் 216 சிசி இன்ஜின் உள்ளது.
இரண்டாவது இடத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10)
நாட்டின் மலிவு விலை கார்களில் மாருதி சுசுகியின் Alto K10 மிகவும் பிரபலமானது. இந்த காரில் 24.39 - 24.9 கிமீ/லிட்டர் மைலேஜ் தரும் மற்றும் 998 சிசி இன்ஜின் உள்ளது மேலும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 3.99 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (சிறந்த 5 பட்ஜெட் கார்கள்).
மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S Presso) உள்ளது. இந்த கார் 24.12 - 25.3 கிமீ/லிட்டர் மைலேஜ் மற்றும் 998 சிசி இன்ஜின் உள்ளது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.26 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (சிறந்த 5 குறைந்த பட்ஜெட் கார்கள்).
ரெனால்ட்டின் இந்த மாடல் மிகவும் சிக்கனமானது (Renault Kwid)
இந்தியாவில் சிக்கனமான கார்களுக்கானப் பட்டியலில், ரெனால்ட் க்விட் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த கார் 21 - 22 கிமீ/லிட்டர் மைலேஜ் மற்றும் 999 சிசி இன்ஜின் உள்ளது. இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.69 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (இந்தியாவில் மலிவான கார்கள்).
இறுதியாக மாருதி செலிரியோ (Maruti Suzuki Celerio)
இந்த பட்டியலில் தவிர்க்க முடியாத பட்ஜெட் காராக மாருதி சுசுகியின் செலிரியோ உள்ளது. இது ஒரு சிறந்த மாடல். குறைந்த விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.99 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (புதிதாக கார் ஓட்ட பழகுபவர்களுக்கான மலிவு விலை கார்கள்). இந்த கார் 26 கிமீ மைலேஜ் வழங்குகிறது.