
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனம் இன்றியமையாததாக உள்ளது. வேலைக்கு செல்ல, நீண்ட தூரம் பயணம் செய்ய பைக்குகள் நமக்கு கைகொடுக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் நீண்ட தூரம் பைக்குகளில் பயணம் செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு பெட்ரோல் செலவும், முதுகு வலியும் பிரச்சனைகளாக முன்வந்து நிற்கும். இந்த செய்தியில் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் முதுகு வலி கொடுக்காத அதே வேளையில் அதிக மைலேஜ் கொடுக்கும் டாப் 5 பட்ஜெட் பைக்குகள் குறித்து பார்க்கலாம்.
லாங் டிரைவ் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த பைக் பஜாஜ் பிளாட்டினா 110 ஆகும். இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள 'Comfortec' தொழில்நுட்பம் முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள மிக நீளமான, மென்மையான சீட் பயணத்தின்போது அதிர்வுகளை குறைக்கும் சஸ்பென்ஷன் ஆக செயல்படும். குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் நீங்கள் ஸ்மூத்தாக செல்ல முடியும். இதுமட்டுமின்றி இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 முதல் 75 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். இதன் விலை ரூ.72,000-ல் இருந்து தொடங்குகிறது.
டிவிஎஸ் ரேடியான் மாடல் பைக் நேர்த்தியான ரெட்ரோ லுக்குக்கு பெயர் போனது. இந்த பைக்கின் சீட் மிகவும் அகலமானது. குஷனிங் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் பயணம் செய்ய ஏற்ற மாடல் இது. இதில் Synchronized Braking Technology (SBT) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்றது. நீண்ட தூரம் ஓட்டும்போது கால்களுக்கும் முதுகிற்கும் அதிக அழுத்தம் தராத நேர்க்கோட்டு அமர்வு நிலை கொண்டதால் தாராளமாக இந்த பைக்கை வாங்கலாம். இது 70 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.78,0000 ஆகும்.
இந்த பைக்கின் 125cc மாடல் லாங் டிராவலுக்கு ஏற்ற பவர் கொடுக்கும். 100cc மாடல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த வண்டியை ஓட்டும்போது அதிர்வுகள் குறைவாக இருக்கும் என்பதால் நீண்ட தூரம் ஓட்டினாலும் சோர்வு, முதுகு வலி இருக்காது. ஹோண்டா ஷைன் என்ஜின் மிகவும் அமைதியானது. மென்மையான கியர் ஷிஃப்டிங் ஓட்டுவதற்கு சுலமாக இருக்கும். இந்த பைக் அதன் வேரியன்ட்டை பொறுத்து 65 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். இந்த மாடலின் எக்ஸ் ஷோரும் விலை ரூ.85,000 ஆகும்.
மைலேஜ் மற்றும் ஸ்டைலான லுக்கை தேடுபவர்களுக்கு டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள செமி-டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் கரடு முரடான சாலைகளிலும் பயணம் செய்வதற்கு ஏற்றதாகும். இந்த மாடலின் ஸ்பெஷலே இலகுவான எடை தான். இதனால் டிராப்பிக்கிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். இந்த மாடல் 70 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.78,000 ஆகும்.
பட்ஜெட் விலையில் நவீன வசதிகள் மற்றும் மைலேஜ் இரண்டையும் கொடுக்கும் சிறந்த 125cc பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125Rஆகும். ஸ்போர்ட்டி லுக்கில் இருக்கும் இந்த மாடலின் ரைடிங் பொசிஷன் முதுகு வலிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒருமுறை பெட்ரோல் போட்டால் 66 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலின் எக்ஸ் ஷோரும் விலை ரூ.95,000 ஆகும்.