Published : Feb 22, 2026, 11:49 PM ISTUpdated : Feb 22, 2026, 11:53 PM IST
இந்தியாவில் செடான் கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ஆண்டு இந்திய சந்தையில் புதிய அப்டேட்டுடன் களமிறங்க போகும் செடான் கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய வாகன சந்தையில் எஸ்யூவி கார்கள் டிரெண்டிங்கில் உள்ளன. எஸ்யூவி மோகத்திற்கு மத்தியிலும், செடான்கள் தங்கள் வலுவான இடத்தைத் தக்கவைத்துள்ளன. நமது நாட்டில் செடான் கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் எஸ்யூவி-களை விட செடான்கள் அதிக வசதியை வழங்குகின்றன. அதிவேக பயணங்களில் சிறந்த நிலைத்தன்மையை இது கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தற்போதுள்ள சில செடான் கார்கள் இந்திய சந்தையில் சிறந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்களைப் பெற உள்ளன. இந்த செடான் கார்கள் குறித்து பார்க்கலாம்.
25
ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் பண்டிகைக் காலத்தில் வெளியாகலாம். இது புதிய ஹெட்லேம்ப்ஸ், பம்பர்கள், அடாஸ் லெவல் 2 மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
35
ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி மாடல் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் பெற உள்ளது. இது ஸ்போர்ட்டியான வெளிப்புற வடிவமைப்பு, 360 டிகிரி கேமரா மற்றும் புதிய கேபின் லேஅவுட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜின் மாற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு வெளியாகலாம். புதிய கிரில், ஹெட்லைட்கள், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ் மற்றும் பெரிய திரை போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
55
ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் வெர்னா ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட்டுக்கு தயாராகி வருகிறது. இது சொனாட்டாவால் ஈர்க்கப்பட்ட வெளிப்புறம், வளைந்த டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் மற்றும் அடாஸ் லெவல் 2 போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். பட்ஜெட் விலையில் இந்த மாடல் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.