பெட்ரோலுக்கு குட்பை சொல்லுங்க.. செம மைலேஜ் கொடுக்கும் டாப் 10 CNG கார்கள்!

Published : Aug 19, 2024, 09:59 PM IST

பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், சந்தையில் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. கடந்த நிதியாண்டில் 4.3 லட்சத்துக்கும் அதிகமான ஹைபிரிட் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மாருதி சுஸுகி முன்னணியில் உள்ளது. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் கார்களும் நல்ல விற்பனையைப் பதிவுசெய்துள்ளன. சிஎன்ஜி வாகனங்களில் அதிகபட்ச மைலேஜ் கொடுக்கும் சிறந்த 10 கார்களை இத்தொகுப்பில் காணலாம்.

PREV
110
பெட்ரோலுக்கு குட்பை சொல்லுங்க.. செம மைலேஜ் கொடுக்கும் டாப் 10  CNG கார்கள்!
Tata Punch iCNG

டாடா பஞ்ச் iCNG டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ.7.23 லட்சம் முதல் ரூ.9.85 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இது 26.99 கிமீ வரை மைலேஜை வழங்குகிறது.

210
Hyundai Grand i10 Nios CNG

இந்த கார் கிராண்ட் ஐ10 நியோஸ் மாருதி சுசுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 1.2 லிட்டர் கப்பா எஞ்சினுடன் வருகிறது. இதன் விலை ரூ.7.68 லட்சம் முதல் ரூ.8.30 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்). இது 27 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

310
Hyundai Aura CNG

ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி ஆரா கிராண்ட் i10 நியோஸ் போன்ற இயங்குதளம் கொண்டது. Tata Tigor iCNG மற்றும் Maruti Suzuki Dzire CNG ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.8.31 லட்சம் முதல் ரூ.9.05 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).

410
Maruti Suzuki Fronx, Toyota Urban Cruiser Taisor

ஃபிராங்க்ஸ் மற்றும் அர்பன் க்ரூஸர் டைசர் ஆகியவை மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து தயாரித்தவை. Fronx CNG ரூ.8.46 லட்சம் முதல் ரூ.9.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. டைசர் ரூ.26,000 விலை உயர்ந்தது. இது ரூ.8.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும். மைலேஜ் 28.51 கி.மீ. கொடுக்கிறது.

510
Maruti Suzuki Baleno, Toyota Glaza

பலேனோ மற்றும் கிளாஸா ஆகியவை மாருதி சுசுகி மற்றும் டொயோட்டாவின் இணை தயாரிப்புகள் ஆகும். 1.2-லிட்டர், K-சீரிஸ் எஞ்சினைப் பெற்றுள்ளன. 30.61 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் விலை பலேனோ சிஎன்ஜி ரூ.8.40 லட்சம் முதல் ரூ.9.33 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸா பலேனோவை விட ரூ.25,000 விலை அதிகம்.

610
Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி வடிவில் 31.12 கிமீ மைலேஜ் தருகிறது. இது ரூ.8.44 லட்சம் முதல் ரூ.9.12 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

710
Maruti Suzuki S-Presso

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி 32.73 கி.மீ. மைலேஜ் தருகிறது. 1-லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு டிரிம்களில் கிடைக்கும். எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜியின் விலை ரூ.5.91 லட்சம் முதல் ரூ.6.11 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).

810
Maruti Suzuki Alto K10

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மாருதி சுஸுகியின் விலை குறைந்த கார்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. S-Presso, WagonR மற்றும் Celerio போல 1-லிட்டர், K-சீரிஸ் எஞ்சினைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்). இது 33.85 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

910
Maruti Suzuki WagonR

மாருதி சுசுகி வேகன்ஆர் 34.05 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. எரிபொருள் சிக்கனத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வேகன்ஆர் சிஎன்ஜியின் விலை ரூ.6.44 லட்சம் முதல் ரூ.6.89 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. 1-லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது.

1010
Maruti Suzuki Celerio

மாருதி சுசுகி செலிரியோ ஒரே டிரிமில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). எரிபொருள் சிக்கனத்தில் முன்னணியில் உள்ளது. 1-லிட்டர் K-சீரிஸ் எஞ்சின் கொண்ட இதில் 34.43 கிமீ மைலேஜ் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories