Top 5 Budget Hatchback Cars : பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களான மாருதி ஆல்டோ K10, டாடா டியாகோ, ரெனால்ட் க்விட் உட்பட 5 சிறந்த கார்களின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் பத்தி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி குறைஞ்சதால, வண்டிகளோட விலை எல்லாம் கொஞ்சம் இறங்கியிருக்கு. இதனால, நிறைய பேர் புதுசா கார் வாங்க ஆர்வம் காட்டுறாங்க. நீங்களும் ஒரு புது ஹேட்ச்பேக் கார் வாங்க பிளான்ல இருந்தா, இந்த கட்டுரை உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இந்த கார்கள்ல நல்ல மைலேஜ், சூப்பரான வசதிகள்னு எல்லாமே இருக்கு. இந்த கார்கள் சிட்டி டிரைவிங்கிற்கு ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி டிராபிக்கில் போகவும் மிகவும் காம்பேக்ட் ஆன கார் ஆக இது இருக்கும். இந்த கார்கள் 5 லட்சத்திற்குள் கிடைக்கும். அதனால் மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு இந்த கார்கள் பெஸ்டாக இருக்கும். பட்ஜெட் விலையில கிடைக்கிற டாப் 5 கார்கள் என்னென்னனு பார்க்கலாம்.
26
மாருதி சுசுகி ஆல்டோ K10
இந்திய மக்களோட ஃபேவரைட் கார்னா அது ஆல்டோ தான். இந்த செக்மென்ட்லயே ரொம்ப குறைஞ்ச விலையில கிடைக்கிற கார்ல இதுவும் ஒண்ணு. இதோட எக்ஸ்-ஷோரூம் விலை 3.99 லட்சம் ரூபாயில இருந்து தொடங்குது. இதுல 1.0-லிட்டர் இன்ஜின் இருக்கு. ஒரு லிட்டருக்கு சுமார் 24.39 கி.மீ. மைலேஜ் கொடுக்கும். சிட்டி டிரைவிங்கிற்கு இந்த கார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கம்மி பட்ஜெட்ல ஒரு SUV மாதிரி தோற்றம் கொண்ட கார் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு மாருதியோட S-பிரெஸ்ஸோ ஒரு நல்ல சாய்ஸ். இதோட விலை ₹4.26 லட்சம். இந்த கார் சுமார் 24 கி.மீ. மைலேஜ் தரும். இதில் அதிநவீன வசதிகள் கிடைக்கும். இந்த காரும் குறுகலான சாலைகளுக்கு செம சாய்ஸாக இருக்கும்.
ரெனால்ட் க்விட் கார், அதோட ஸ்போர்ட்டியான லுக், புது டிசைனுக்காக இளைஞர்கள் மத்தியில ரொம்ப ஃபேமஸ். இதோட ஆரம்ப விலை ₹4.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதுல 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மாதிரி அப்டேட்டட் ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்கு. பட்ஜெட்ல ஒரு ஸ்டைலான கார் தேடுறவங்களுக்கு இது ஒரு சூப்பர் ஆப்ஷன். ரெனால்ட் களமிறக்கிய சீப் அண்ட் பெஸ்ட் கார் இதுவாகும்.
டிசைனை விட பாதுகாப்பு தான் முக்கியம்னு நினைக்கிறவங்களுக்கு டாடா டியாகோ தான் பெஸ்ட். குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்ல இந்த கார் 4-ஸ்டார் சேஃப்டி ரேட்டிங் வாங்கியிருக்கு. ₹5.65 லட்சத்துல இருந்து தொடங்குற இந்த கார்ல, நல்ல சவாரி அனுபவமும், பவர்ஃபுல்லான 1.2-லிட்டர் இன்ஜினும் இருக்கு. தற்போது இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் வந்துள்ளது. அதில் அதிநவீன வசதிகள் நிரம்பி இருக்கிறது.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கார்களில் ஒன்றான வேகன்ஆர், ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்தோட செல்லப் பிள்ளை. ₹5.54 லட்சத்துல இருந்து தொடங்குற இந்த கார்ல நல்ல ஹெட்ரூம், விசாலமான கேபின், பவர்ஃபுல்லான CNG ஆப்ஷன்னு பல வசதிகள் இருக்கு.