இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான EV! Tiago கார் மீது ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கும் Tata

Published : Mar 07, 2025, 08:46 AM IST

டாடா மோட்டார்ஸ், அவங்களின் Tiago EV எலக்ட்ரிக் கார்களுக்கு மார்ச் மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் தள்ளுபடி அறிவிவித்துள்ளது. இதில் கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளும் அடங்கும்.

PREV
15
இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான EV! Tiago கார் மீது ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கும் Tata

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து மாதங்களையும் போலவே இந்த மார்ச் மாதத்திற்கும் தங்கள் கார்கள் மீது சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த கார்களுக்கு தள்ளுபடியோடு சேர்த்து கிரீன் போனஸும் வழங்கப்படுகிறது. இந்த மாதம், டியாகோ ஈவி எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் வாங்கும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகை கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 2024 மாடல் மீதும், 2025 மாடல் மீதும் வெவ்வேறு தள்ளுபடிகளை நிறுவனம் வழங்குகிறது. கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் போனஸ் போன்ற சலுகைகள் தள்ளுபடி பட்டியலில் உள்ளது என சொல்லப்படுகிறது.

25
பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்

டாடா டியாகோ ஈவி சிறப்பம்சங்கள்

2022 செப்டம்பரில் தான் டாடா டியாகோ ஈவி வெளியானது. டியாகோ ஈவி 4 வேரியண்ட்களில் வாங்கலாம். இதில் XE, XT, XZ+, XZ+ Lux உள்ளது. இதனை 5 கலர்களில் வாங்கலாம். டீல் ப்ளூ, டேடோனா கிரே, ட்ராபிகல் மிஸ்ட், பிரிஸ்டைன் ஒயிட், மிட்நைட் பிளம் என கலர்கள் உள்ளது. நிறுவனம் இந்த மாடலில் சில அப்டேட்களைக் கொண்டு வந்துள்ளது. தற்போது இதில் சாதாரண க்ரோம் டாடா லோகோ கிடையாது. புது 2D டாடா லோகோவை சேர்த்துள்ளது. இதனை முன்பக்க கிரில்லிலும், டெயில்கேட்டிலும், ஸ்டியரிங் வீலிலும் பார்க்க முடியும்.

35
டாடா டியாகோ

2024 டாடா டியாகோ ஈவியில் இப்போது ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் கூட சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் டாப் வேரியண்டான 'XZ+ டெக் லக்ஸ்'ல் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளது. XZ+ல் இருந்து அனைத்து வேரியண்ட்களிலும் இது இனி இருக்கும். டியாகோ ஈவியின் அனைத்து மாடல்களிலும் இப்போது புது கியர் செலக்டர் நாபோடு வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 15A சாக்கெட் மூலமாகவும் சார்ஜ் செய்யலாம்.
 

45
தள்ளுபடி விலையில் டாடா டியாகோ

டியாகோ எலக்ட்ரிக் காரில் 2 டிரைவிங் மோட் உள்ளது. இந்த ஈவி 5.7 வினாடிகளில் ஜீரோவில் இருந்து 60 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும். எட்டு ஸ்பீக்கர் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், எலக்ட்ரிக் ஓஆர்விஎம் என அதிகமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் டியாகோ ஈவிதான். டியாகோ எலக்ட்ரிக் காரின் பேட்டரிக்கும், மோட்டாருக்கும் 8 வருடம் அல்லது 160,000 கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. ஃபுல் சார்ஜில் 275 கிலோமீட்டர் வரைக்கும் இந்த எலக்ட்ரிக் கார் போகும்.
 

55

கவனிக்கவும், வெவ்வேறு தளங்களோட உதவியோட கார்கள்ல கிடைக்கிற தள்ளுபடிகளை மேல சொல்லியிருக்கோம். இந்த தள்ளுபடிகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு ஊருக்கும், டீலர்ஷிப்புக்கும், ஸ்டாக்குக்கும், கலருக்கும், வேரியண்ட்டுக்கும் ஏத்த மாதிரி மாறும். அதனால ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல இருக்கிற டீலர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

Read more Photos on
click me!

Recommended Stories