டிசைன், அம்சங்கள்
ICE வெர்ஷனில் இருந்து மாறுபட்டு, ஹாரியர் EVயில் மூடப்பட்ட ஃப்ரன்ட் கிரில், சற்று மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய டிசைன் செய்யப்பட்ட ஏரோ ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், டூயல்-டோன் ஃபினிஷ், முன் கதவுகளிலும் டெயில் கேட்டிலும் 'EV' பேட்ஜிங் இருக்கும்.
ரேஞ்ச், பேட்டரி, அம்சங்கள்
ஆக்டிவ் டாட் EV பிளாட்ஃபார்ம் அடிப்படையில, டாட்டா ஹாரியர் EV 2 பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் மாடலில் டுயல் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 75kWh பேட்டரி பேக் இருக்கும். இதன் பவர் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், டார்க் அவுட்புட் 500 Nm ஆக இருக்கும். இந்த EV அதிகபட்சமாக 600 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.