Budget EV Cars: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பியுள்ளனர். இந்தச் சூழலில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த EV கார்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் பார்வை எலக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், எலக்ட்ரிக் கார்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சாதாரண பெட்ரோல், டீசல் கார்களைப் போலவே, எலக்ட்ரிக் கார்களும் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாடா பஞ்ச், டியாகோ, எம்ஜி காமெட் போன்ற கார்கள் உள்ளன. பட்ஜெட்டை இன்னும் கொஞ்சம் அதாவது ரூ.15 லட்சம் வரை அதிகரித்தால், எம்ஜி வின்ட்சர், டாடா நெக்ஸான் போன்ற சற்று பிரீமியம் எலக்ட்ரிக் கார்களை வாங்கலாம்.
26
டாடா டியாகோ EV
தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று. பேட்டரி பேக்கைப் பொறுத்து, இந்த கார் 315 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. டாடா டியாகோ EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
36
டாடா பஞ்ச் EV
தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று. பேட்டரி பேக்கைப் பொறுத்து, இந்த கார் 315 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. டாடா டியாகோ EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
முக்கியமாக நகரப் பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது எம்ஜி காமெட் EV கார்கள். இது 230 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என்று எம்ஜி நிறுவனம் கூறுகிறது. இதன் சிறிய வடிவமைப்பு, நெரிசல் மிகுந்த நகர சாலைகளுக்கு மிகவும் ஏற்றது. எம்ஜி காமெட் EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.63 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
56
எம்ஜி வின்ட்சர் EV
ஸ்போர்ட்டியான ஸ்டைலுடன், விசாலமான கேபின் இடவசதி மற்றும் வசதியான குடும்ப பயணத்திற்கு இந்த கார் முக்கியத்துவம் அளிக்கிறது. வேரியன்ட்டைப் பொறுத்து, இது 300 கிலோ மீட்டருக்கும் மேல் ரேஞ்ச் தரும் என எம்ஜி கூறுகிறது. எம்ஜி வின்ட்சர் EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.09 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
66
டாடா நெக்ஸான் EV
நெடுஞ்சாலைப் பயணங்கள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இதை டாடா வடிவமைத்துள்ளது. இதன் டாப்-ஸ்பெக் வேரியண்ட் 450 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் தரும் என நிறுவனம். டாடா நெக்ஸான் EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.12.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.