Affordable Royal Enfield: குட் நியூஸ்.. குறைந்த விலையில் ராயல் என்பீல்ட் 250சிசி பைக் வரப்போகுது.. எவ்வளவு தெரியுமா?

Published : Nov 23, 2026, 02:55 PM IST

Affordable Royal Enfield: ராயல் என்பீல்ட் பைக் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவு. இந்நிலையில், குறைந்த விலையில் புதிய 250சிசி பைக்குகளை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
15
குறைந்த விலை பைக் தயாரிப்பில் ராயல் என்பீல்ட்

ராயல் என்பீல்ட் பைக் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தின் தற்போதைய 350சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளின் விலை காரணமாக சிலர் வாங்கும் முடிவைத் தள்ளிப்போடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் புதிய 250சிசி பைக்குகளை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சாதாரண பயணிகள் பைக்குகளைப் பயன்படுத்தி வரும் இளைஞர்கள் அடுத்த கட்டமாக அதிக திறன் கொண்ட பைக்கிற்கு மாறுவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

25
ஒரு பைக் அல்ல, பல மாடல்கள் வருமா?

தற்போது Himalayan 450, Guerrilla 450 மற்றும் 650சிசி வகை பைக்குகள் மூலம் உயர்தர சந்தையில் கவனம் செலுத்தி வரும் நிறுவனம், குறைந்த விலைப் பிரிவிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. இதற்காகத் தனியாக ஒரு 250சிசி தளத்தை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் பயன்படுத்தி வெவ்வேறு வடிவமைப்புகளிலும் பல பைக் மாடல்களை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எத்தனை மாடல்கள் அறிமுகமாகும், அவற்றின் பெயர்கள் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

35
ரூ.1.25 லட்சம் முதல் விலை இருக்குமா?

புதிய 250சிசி பைக்குகளின் தொடக்க விலை சுமார் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை இருக்கலாம் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தற்போதைய 350சிசி பைக்குகளைவிடக் குறைந்த விலையில் ராயல் என்பீல்ட் பைக்கை வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும், இது எதிர்பார்க்கப்படும் விலை மட்டுமே. நிறுவனம் அதிகாரப்பூர்வ விலையை அறிவிக்கவில்லை. மேலும், இது எக்ஸ்-ஷோரூம் விலையா, எந்த மாடலுக்கான விலையா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

45
40-45 கி.மீ. மைலேஜ் கிடைக்குமா?

இந்தப் புதிய பைக்குகளில் ஹைபிரிட் தொழில்நுட்பம் இடம்பெறலாம் என்றும், இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 40 முதல் 45 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்ஜின் அமைப்பு, ஆற்றல், முறுக்குவிசை, ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் வகை உள்ளிட்ட எந்த விவரத்தையும் ராயல் என்பீல்ட் உறுதிப்படுத்தவில்லை. எனவே, இந்த மைலேஜ் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வ சோதனை முடிவாகக் கருத முடியாது.

55
எப்போது அறிமுகமாகும் புதிய பைக்குகள்?

ஊடக அறிக்கைகளின்படி, புதிய 250சிசி பைக்குகள் 2027-28 நிதியாண்டின் பிற்பகுதியில், அதாவது 2028 மார்ச் மாதத்துக்குள் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் 200-250சிசி பைக் பிரிவின் விற்பனை வளர்ந்து வருவதும் இந்தத் திட்டத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இந்தப் பிரிவின் விற்பனை 75 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தொழில்துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புதிய பைக்குகளின் அறிமுகம், விலை, மைலேஜ் உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories