பட்டைய கிளப்பும் புது புல்லட்! ரெட்ரோ டிசைனில் ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350!

First Published | Nov 24, 2024, 1:51 PM IST

ராயல் என்ஃபீல்டு Goan Classic 350 மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 மாடலின் ரெட்ரோ வடிவமைப்புடன் புதிய அப்டேட்களையும் கொண்டிருக்கிறது. இந்த புதிய பைக்கின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

Royal Enfield Goan Classic 350

ராயல் என்ஃபீல்டு, அதன் பிரபலமான கிளாசிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்ட Goan Classic 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. பல அப்டேட்களுடன் வந்துள்ள இந்த பைக் கோவாவில் நடைபெற்ற மோட்டோவர்ஸ் 2024 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Royal Enfield Goan Classic 350

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை ரூ.2.35 லட்சம், டூயல்-டோன் வேரியண்ட் விலை ரூ.2.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Royal Enfield Goan Classic 350

கிளாசிக் 350 மாடலின் ரெட்ரோ தோற்றத்தைத் தக்கவைத்திருக்கும் கோவான் கிளாசிக் 350, அப்டேட்களையும் பெற்றுள்ளது. ஏப் ஹேங்கர் ஹேண்டில்பார், ஃபார்வேர்டு-செட் ஃபுட்பெக்ஸ், ஸ்லாஷ்-கட் எக்ஸாஸ்ட் பைப் என சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன.

Royal Enfield Goan Classic 350

டியர்டிராப் பெட்ரோல் டேங்க், வட்ட வடிவ LED ஹெட்லேம்ப், சிங்கிள் பீஸ் சீட், ஸ்விங்கர்ம் பொருத்தப்பட்ட பின்புற ஃபெண்டர் ஆகியவை சிறப்பு அம்சங்களும் இதில் அடங்கும். இது டியூப்லெஸ், ஒயிட்வால் டயர்களுடன் வருகிறது. வயர்-ஸ்போக் வீல்களைக் கொண்டுள்ளது.

Royal Enfield Goan Classic 350

கிளாசிக் 350 இல் உள்ள அதே 349சிசி ஜே-சீரிஸ் இன்ஜினைக் கொண்டுள்ளது. சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வழங்குகிறது. இது ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Royal Enfield Goan Classic 350

இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. டூயல் சேனல் ABS உள்ளது. இந்த பைக்கில் 19 அங்குல முன் சக்கரம் மற்றும் 16 அங்குல பின் சக்கரம் கொண்ட தனித்துவமான சக்கரக் கட்டமைப்பு உள்ளது. இது இது கிளாசிக் 350 இன் வடிவமைப்பில் இருந்து மாறுபடுகிறது.

Royal Enfield Goan Classic 350

கோன் கிளாசிக் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப்மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல்-அனலாக் கன்சோலைக் கொண்டுள்ளது.

Royal Enfield Goan Classic 350

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் ரேவ் ரெட், டிரிப் டீல், பர்பிள் ஹேஸ் மற்றும் ஷேக் பிளாக் என்ற நான்கு கலர் வேரியண்ட்களில் கிடைக்கும்.

Latest Videos

click me!