Revolt RVX எலெக்ட்ரிக் பைக், ப்ளூ, பேர்ல் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் ஒயிட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிசைன், சுறா மீனைப் போல ஷார்ப்பாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. மேலும், இதில் குயிக் பூஸ்ட் மோட், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், அப்டேட்டட் டெக்னாலஜி, ரிவர்ஸ் மோட் மற்றும் வாக் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. எடை குறைந்த அதே சமயம் உறுதியான கார்பன் பேனல்கள் மற்றும் நீளமான சீட் இதில் அடங்கும். ஒருவர் மட்டும் ஓட்டும்போது 14 டிகிரி வரையிலும், பின்னால் ஆள் இருக்கும்போது 11 டிகிரி வரையிலும் ஏற்றங்களில் எளிதாகச் செல்லும் திறன் கொண்டது.
டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் சவுண்ட் பாக்ஸ்
இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் மற்றும் பின்புறத்தில் முழு எல்இடி விளக்குகள், மற்றும் நான்கு விதமான பைக் சத்தங்களை எழுப்பும் சவுண்ட் பாக்ஸ் ஆகியவை உள்ளன. ரிவோல்ட் நிறுவனம் ஏற்கனவே பல அட்டகாசமான பைக்குகளை வெளியிட்டுள்ளது. RV1, RV1+, RV BlazeX, RV400 BRZ மற்றும் RV400 போன்ற மாடல்கள் இதில் அடங்கும். RV BlazeX தினசரி பயன்பாட்டிற்காகவும், 'RV400' செயல்திறனை விரும்புபவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.