புதிய ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் முழு 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் இருப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்திய கார் சந்தையில் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் காலம் இது. அந்த வகையில், புதிய ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் முழு 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Evolution, Techno, Iconic ஆகிய வேரியண்ட்கள் சோதனையில் பயன்படுத்தப்பட்டாலும், இந்த மதிப்பீடு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என்பது முக்கிய அம்சம்.
25
கார் பாதுகாப்பு அம்சங்கள்
பெரியவர்கள் பாதுகாப்பு பிரிவில் அதிகபட்சமாக 32 புள்ளிகள் 30.49 புள்ளிகள் பெற்றுள்ளது. 64 கிமீ வேகத்தில் நடந்த முன்பக்க மோதல் சோதனையில், ஓட்டுநரின் தலை, கழுத்து மற்றும் உடல் முக்கிய பகுதிகளுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைத்தது. மார்பு மற்றும் மார்பு பகுதிகளில் ‘போதுமானது’ என்ற மதிப்பீடு கிடைத்தாலும், மொத்த பாதுகாப்பு தரம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
35
டஸ்டர் ரேட்டிங்
பக்கவாட்டு மோதல் சோதனைகளிலும் இந்த எஸ்யூவி சிறப்பாக செயல்பட்டது. நகரும் தடுப்பு சோதனை மற்றும் பக்கம் கம்பத்தில் மோதும் சோதனைகளில் முன் இருக்கை பயணிகளுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவுகள், விபத்து நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டஸ்டர் உள்ளதை காட்டுகின்றன.
குழந்தைகள் பாதுகாப்பிலும் டஸ்டர் அசத்தியுள்ளது. 49 புள்ளிகளில் 45 புள்ளிகள் பெற்று உயர்ந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான CRS அமைப்பை பொருத்துவதில் முழு மதிப்பெண் பெற்றதுடன், டைனமிக் சோதனைகளிலும் சிறந்த செயல்திறன் காட்டப்பட்டுள்ளது. ISOFIX ஆங்கரேஜ் மற்றும் பாதுகாப்பான இருக்கை அமைப்புகள் மூலம் முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல்களில் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்தது.
55
வலிமையான பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலும் வலுவாக உள்ளது. அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், ABS, EBD, ESP, டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. மேல் வேரியண்ட்களில் 360° கேமரா, ADAS, பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மொத்தத்தில், பாதுகாப்பை முதன்மையாகக் கருதும் வாடிக்கையாளர்களுக்கு டஸ்டர் ஒரு வலுவான தேர்வாக உருவெடுத்துள்ளது.