எந்த நேரமும் ஈசியா பேட்டரிமாற்றலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெற லெவல்!

First Published | Nov 26, 2024, 1:51 PM IST

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் பேட்டரியை மாற்றக்கூடிய (Swappable Batter) வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. வரும் வாரத்தில் இந்த ஸ்கூட்டரில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ola Electric Scooter With Swappable Battery

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) அதன் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால், விரைவில் வெளிவரவிருக்கும் இந்த ஸ்கூட்டரின் மூன்று படங்களைப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்றும் புதிய மாற்றக்கூடிய பேட்டரியின் தோற்றத்தைக் காணமுடிகிறது.

Ola Electric Scooter With Swappable Battery

படங்கள் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) முன்பகுதியின் ஒரு பகுதியைக் காட்டுகின்றன. ரைடர் இருக்கைக்கு பின்னால் ஒரு லோடு பெட் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. முன்புற ஏப்ரனில் பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப், கிராஷ் கார்டுகள் மற்றும் ரைடரின் ஃபுட்வெல்லுக்குப் பின்னால் அமைக்கப்பட்ட ஃபுட் பெக்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அம்சங்களாகத் தெரிகின்றன.

Tap to resize

Ola Electric Scooter With Swappable Battery

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) டெலிவரி சேவையை மையமாகக் கொண்ட சில ஸ்கூட்டர்களைப் போல, ஃபுட்வெல்லில் சுமைகளை ஏற்றிச் செல்ல வசதியான வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். பின் இருக்கையை அகற்றக்கூடிய வசதியும் வழங்கப்படலாம் என்று பவிஷ் அகர்வால் வெளியிட்ட படங்களின் மூலம் கணிக்க முடிகிறது.

Ola Electric Scooter With Swappable Battery

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) ஃபேரிங் ஒரு நபர் இருக்கையைச் சுற்றி, ஸ்கூட்டரின் பிரேம் ஃபேரிங்கிற்கு வெளியே நீட்டிக்கப்பட்டுள்ளது. இது லோடு பெட்டிற்கு போதிய அளவுக்கு இடம் அளிக்கிறது. சீட்டுக்கு அடியில் மாற்றக்கூடிய பேட்டரி  (Swappable Battery) இருப்பதால், அண்டர் சீட் ஸ்டோரேஜ் குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. 2 பேட்டரிகள் வைத்துக்கொள்ளும் இடம் இருக்கலாம் என படத்திலிருந்து தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் ஹப்-மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Ola Electric Scooter With Swappable Battery

மூன்றாவது படம் ஓலாவின் மாற்றக்கூடிய பேட்டரியின் (Swappable Battery) முதல் தோற்றத்தை வழங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டருக்கான பேட்டரியின் காப்புரிமை படங்கள் ஆன்லைனில் வெளியாகின. தற்போது ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooters) அனைத்தும் ஃபுட்வெல்லின் கீழ் பொருத்தப்பட்ட நிலையான பேட்டரிகளைக் கொண்டுள்ளன.

Ola Electric Scooter With Swappable Battery

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) ஓலாவின் மற்ற மாடல்களைப் போல் இல்லாமல், குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய மாடலாக (low-speed model) இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரத்தில் இந்த ஸ்கூட்டரை ஓலா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!