நடுத்தர மக்களுக்கு பம்பர் ஆஃபர்.. ரூ.6 லட்சம் கூட இல்ல.. நிஸானின் மிரட்டலான 7 சீட்டர் கார் அறிமுகம்!

Published : Sep 18, 2026, 06:18 PM IST

Nissan Gravite: நடுத்தர மக்களுக்காக பட்ஜெட் விலையில் 'நிஸான் கிராவிட்' 7 சீட்டர் காரை நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் மைலேஜ் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
நிஸான் கிராவிட் கார் அறிமுகம்

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் பட்ஜெட் விலை 7 சீட்டர் கார்களுக்கு எப்போதுமே பெரிய டிமாண்ட் உண்டு. குடும்பத்தோடு ஜாலியாக பயணிக்க பலரும் 7 சீட்டர் கார்களையே விரும்புவார்கள். ஆனால், பட்ஜெட் இடிப்பதால் பலரும் பின்வாங்குவது வழக்கம். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸான் தனது புதிய எம்பிவி மாடலான 'நிஸான் கிராவிட்' (Nissan Gravite) காரை களமிறக்கியுள்ளது. வெறும் ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்தக் கார், மைலேஜ் மற்றும் ஃபீச்சர்ஸில் மற்ற கார்களுக்கு செம டஃப் கொடுக்கிறது.

24
கில்லர் லுக், மாடர்ன் டிசைன்

நிஸான் கிராவிட் கார் வெளியிலிருந்து பார்க்கவே ரொம்ப அட்ராக்டிவாக இருக்கிறது. முன்பக்கத்தில் உள்ள கிளாஸ் பிளாக் ஃப்ரண்ட் கிரில் மற்றும் ஹெக்ஸகன் இன்சர்ட்டுகள் காருக்கு மாடர்ன் லுக்கை தருகின்றன. ஸ்டைலான எல்இடி டிஆர்எல், ஸ்மோக்டு ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் காரின் அழகை இன்னும் கூட்டுகின்றன. இதுபோக 15-இன்ச் ஃப்ளெக்ஸ் வீல்கள், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் சில்வர் ஆக்ஸென்ட்டுகள் இந்த 7 சீட்டர் காருக்கு ஒரு எஸ்யூவி (SUV) ஃபீலைக் கொடுக்கின்றன.

34
கிங் சைஸ் கேபின்; சூப்பர் ஃபீச்சர்ஸ்

காரின் இன்டீரியர் விஷயத்தில் நிஸான் எந்த காம்ப்ரமைஸும் செய்துகொள்ளவில்லை. 7 பேர் தாராளமாக உட்காரும் வகையிலான அகலமான சீட்டிங் வசதியை நிறுவனம் கொடுத்துள்ளது. கேபினில் உள்ள 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. அத்துடன் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் ஆர்ம்ரெஸ்ட் போன்ற மாடர்ன் வசதிகளையும் வழங்கியுள்ளனர். பயணிகளின் வசதிக்காக பின் இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் இன்ஜின்; லிட்டருக்கு 24 கி.மீ மைலேஜ்

நிஸான் கிராவிட் கார் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 71 bhp பவரையும் 96 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இந்தக் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மட்டுமில்லாமல் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி வேரியண்டிலும் இது கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு அதிகபட்சமாக 24 கிலோமீட்டர் வரை பெஸ்ட் மைலேஜ் கொடுப்பது இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

44
பாதுகாப்பில் காம்ப்ரமைஸே இல்லை

பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்தக் காரில் பல சேஃப்டி ஃபீச்சர்களை சேர்த்துள்ளனர். ஸ்டாண்டர்டாகவே 6 ஏர்பேக்குகள் கொடுத்திருப்பது சிறப்பு. இதுபோக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற மாடர்ன் சேஃப்டி வசதிகள் உங்கள் பயணத்தை ரொம்பவே சேஃப் ஆக்குகின்றன.

விலை மற்றும் வேரியண்ட்களின் முழு விவரம்

நிஸான் கிராவிட் கார் விசியா (Visia), அசென்டா (Acenta), என்-கனெக்டா (N-Connecta) மற்றும் டெக்னா (Tekna) என நான்கு முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை நிறுவனம் சுமார் ரூ.5.65 லட்சமாக நிர்ணயித்துள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்ப இதன் விலை ரூ.5.65 லட்சத்தில் தொடங்கி ரூ.11.30 லட்சம் வரை செல்கிறது. இந்திய மார்க்கெட்டில் உள்ள ரெனால்ட் ட்ரைபர், மாருதி சுஸுகி எர்டிகா, டாடா பஞ்ச் மற்றும் கியா கேரன்ஸ் போன்ற கார்களுக்கு இது செம ஃபைட் கொடுக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் அதிக ஃபீச்சர்ஸ் மற்றும் மைலேஜ் எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories