நெக்ஸான் முதல் கர்வ் இவி வரை மெகா தள்ளுபடி... டாடா ஆஃபரால் ஷோரூம்களில் குவியும் வாடிக்கையாளர்கள்

Published : May 19, 2026, 12:11 PM IST

Tata Electric Car Discounts : டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான், பஞ்ச், மற்றும் டியாகோ உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களுக்கு மே மாதத்தில் கார் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் இவி வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

PREV
15
டாடா இவி கார்கள் மீது ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி

பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் சூழலில், இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் தினசரி பயணம் செய்பவர்கள் “இவி வாங்கலாமா?” என்ற கேள்வியை தீவிரமாக யோசித்துள்ளனர். இந்த நேரத்தில்தான் டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் கார் வரிசையில் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்து ஆட்டோ மார்க்கெட்டையே பரபரப்பாக்கியுள்ளது.

25
மே மாத கார் சலுகைகள்

இந்த மே மாத சலுகைகளில் டாடா நெக்ஸான் இவி, பஞ்ச் இவி, டியாகோ இவி, ஹாரியர் இவி மற்றும் கர்வ் இவி போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாடல் வருடம் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடுகின்றன. குறிப்பாக எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் போனஸ், கிரீன் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கில் சேமிப்பை ஏற்படுத்துகின்றன.

35
டாடா நெக்ஸான் சலுகை

இதில் அதிக கவனம் ஈர்த்திருப்பது டாடா கர்வ் இவி. இந்த எஸ்யூவி Coupe மாடலுக்கு நிறுவனம் அதிகபட்சமாக ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இவி மார்க்கெட்டில் போன்ற பெரிய சலுகைகள் அரிதாகவே பார்க்கப்படுகின்றன. மேலும் பஞ்ச் இவி மற்றும் டியாகோ இவி மாடல்களுக்கும் ரூ.2 லட்சத்தை தாண்டிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் “இப்போ வாங்கலாமா அல்லது இன்னும் காத்திருக்கலாமா?” என்ற விவாதம் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ளது.

45
டாடா கார் மெகா தள்ளுபடி

மற்றொரு பக்கம், ஹாரியர் இவி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக இன்டர்வென்ஷன் போனஸ் வழங்கப்படுவது கவனம் பெற்றுள்ளது. ICE காரிலிருந்து இவி-க்கு மாறுபவர்களுக்கும் கூடுதல் லாயல்டி போனஸ் வழங்கப்படுவது, இவி மாற்றத்தை வேகப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இவி ஆப் அதிகரிக்க டாடா தீவிரமாக செயல்படுகிறது என்பதற்கான சிக்னலாக இதை ஆட்டோ வட்டாரங்கள் கூறுகின்றன.

55
டாடா எலக்ட்ரிக் கார்

ஆனால் இந்த தள்ளுபடிகள் நகரம், மாநிலம், டீலர்ஷிப், ஸ்டாக் இருப்பு மற்றும் காரின் வேரியண்ட் போன்றவற்றைப் பொறுத்து மாறக்கூடும். எனவே, இவி வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள டாடா டீலரை நேரடியாக தொடர்புகொண்டு சரியான விலை மற்றும் ஆஃபர் விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் டாடா இவிகளின் இந்த மெகா ஆஃபர்கள் பலரையும் ஷோரூம்களை நோக்கி திரும்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories