ரூ.25,000 மட்டுமே... 55 கிமீ ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உடனே வாங்கிடுங்க!

Published : May 01, 2026, 03:44 PM IST

Avon Cycles அறிமுகப்படுத்திய Avon E Plus, சுமார் ரூ.25,000 விலையில் கிடைக்கும் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஒருமுறை சார்ஜில் 55 கி.மீ தூரம் வரை செல்லும் இந்த ஸ்கூட்டர், மாணவர்கள், தினசரி நகரப் பயணிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

PREV
14
மலிவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

2026-ல் மலிவு விலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக வரவேற்பு காணப்பட்ட நிலையில், Avon Cycles நிறுவனம் அறிமுகப்படுத்திய Avon E Plus ஸ்கூட்டர் தினசரி பயணிகளுக்கான சுலபமான மற்றும் பயனுள்ள தேர்வாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல் செலவை குறைக்க விரும்பும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 220W BLDC மோட்டார் மற்றும் 48V லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது.

24
55 கி.மீ வரை பயணம் செய்யலாம்

ஒருமுறை முழு சார்ஜில் சுமார் 55 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். அதிக வேகத்திற்கு அல்ல, நகரப்பயணங்களுக்கு ஏற்ற மென்மையான செயல்திறன் இதன் முக்கிய அம்சம். 25 கி.மீ வேகம் வரை செல்லும் இது தினசரி குறுகிய தூர பயணங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். வடிவமைப்பில் எளிமையும் பயன்தன்மையும் முக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

34
பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்

பெண்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு இதை பயன்படுத்த சுலபமானதாக உள்ளது. kulirchi, பயன்பாடு தினசரி தாங்கும் வலிமை இதில் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளதால், சாலையின் குழியிலிருந்து வரும் அதிர்வுகளை குறைக்க உதவுகிறது. மேலும் முன் மற்றும் பின் டிஸ்க் பிரேக் இருப்பதால் பாதுகாப்பான நிறுத்த திறன் கிடைக்கிறது. சைடு-ஸ்டாண்ட் அலர்ட் போன்ற சிறிய ஆனால் முக்கிய அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

44
மாணவர்களுக்கு ஸ்கூட்டர்

சுமார் ரூ.25,000 ஆரம்ப விலையில் கிடைக்கும் Avon E Plus, மிகவும் குறைந்த முதலீட்டில் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். குறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவு இல்லாதது, அமைதியான பயணம் ஆகியவை இதன் கூடுதல் பலன்கள். தினசரி நகர பயணத்திற்கு எளிய, செலவுசெலுத்த, சுற்றுச்சூழல் நட்பு வாகனம் தேவைப்படுபவர்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories