மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாகி, இது விரைவில் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்டாக வெளியான படங்களில், இந்த கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இருந்தாலும், 2026-ல் வரவிருக்கும் இந்த புதிய மாருதி ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டில், முன்பக்க கிரில், பம்பர் மற்றும் ஹெட்லேம்ப்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, முன்பக்கத் தோற்றம் சற்று புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விக்டோரிஸ் மிட்சைஸ் எஸ்யூவி-யின் சில டிசைன் அம்சங்களும் இதில் இருக்கலாம்.
முக்கிய அப்டேட்டாக ADAS வசதி
இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், புதிய மாருதி ஃபிரான்க்ஸ் 2026 ஃபேஸ்லிஃப்ட்டில் லெவல் 2 ADAS (Advanced Driver Assistance System) வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு சோதனை செய்யப்பட்ட ஒரு மாடலின் பின்பக்க பம்பரில் LIDAR (Light Detection and Ranging) யூனிட் பொருத்தப்பட்டிருந்தது. இது லேசர் துடிப்புகளைப் பயன்படுத்தி தூரத்தை அளந்து, சுற்றுப்புறத்தின் துல்லியமான 3D மாடலை உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகும்.