103 bhp பவரும் 138 Nm டார்க்கும் தரக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொடர்கிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளன. மேனுவல் லிட்டருக்கு 20.65 கிமீ மைலேஜும், ஆட்டோமேட்டிக் 20.04 கிமீ மைலேஜும் தரும்.
சியாஸில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை இப்போது அனைத்து வகைகளிலும் உள்ளன. இரட்டை ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ISOFIX சைல்ட் சீட் ஆங்கர்கள், EBD உடன் கூடிய ABS போன்றவையும் உள்ளன.