மஹிந்திரா நிறுவனம் இந்த மாதம் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனம் தனது மின்சார எஸ்யூவி வரிசையில் இந்த மாதம் கனிசமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நாட்டில் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளராக இருக்கும் இந்த நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக XUV400 மாடலில் மிக உயர்ந்த தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சிறப்பு சலுகை மார்ச் மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த சலுகை பட்டியலில் மஹிந்திரா XEV 9e, மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XUV400 EL Pro போன்ற மாடல்கள் அடங்கும். மேலும், மஹிந்திரா XEV 9S மற்றும் XUV 3XO EV போன்ற புதிய மின்சார மாடல்களையும் நிறுவனம் தனது EV வரிசையில் சேர்த்துள்ளது.
23
ரூ.1.4 லட்சம் வரை தள்ளுபடி
எதிர்காலத்தில் மேலும் பல மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா XEV 9e மாடலில் ரூ.1.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பின்-சக்கர இயக்கி அமைப்பில் வருகிறது. இதில் 59 kWh மற்றும் 79 kWh என இரண்டு பேட்டரி விருப்பங்கள் உள்ளன. இவை முறையே சுமார் 227 bhp மற்றும் 281 bhp சக்தி வழங்குகின்றன. இந்த மாதலின் ஆரம்ப விலை ரூ.21.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மஹிந்திரா BE 6 மாடலுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
33
மின்சார எஸ்யூவி தள்ளுபடி
இதுவும் 59 kWh மற்றும் 79 kWh பேட்டரியுடன் கிடைக்கிறது. 227 bhp முதல் 281 bhp வரை சக்தி வழங்கும் இந்த மாடல், 380 Nm டார்க் வழங்குகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.19.65 லட்சம் (ex-showroom) ஆகும். மஹிந்திரா XUV400 EL Pro மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் 34.5 kWh மற்றும் 39.4 kWh பேட்டரி விருப்பங்கள் உள்ளன. இது 359 கிமீ முதல் 456 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. மேலும், நவராத்திரி முதல் நாளிலேயே 600க்கும் மேற்பட்ட மின்சார எஸ்யூவி-களை விநியோகித்து, நிறுவனம் புதிய சாதனையும் படைத்துள்ளது.