
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரின் டிசைன் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது. முன்பக்கம் பெரிய க்ரோம் ஸ்டட் கொண்ட ரெக்டாங்குலர் கிரில், இருபுறமும் ஸ்கொயர் LED ஹெட்லேம்ப்ஸ் உள்ளது. கிரில் மேலே 'SCORPIO' என எழுதப்பட்டுள்ளது. அக்ரெசிவ் பம்பர், பெரிய ஸ்கிட் பிளேட், ஆரஞ்சு நிற டோவிங் பாயின்ட்ஸ், LED ஃபாக் லேம்ப்ஸை சுற்றி பிளாக் பார்டர் உள்ளது. பக்கவாட்டில் டூயல் கேப் லே-அவுட், ரூஃப் ரெயில்ஸ், பளபளப்பான கருப்பு ORVM-கள், டோர் ஹேண்டிலில் க்ரோம் இன்செர்ட்ஸ் உள்ளன.
ஆஃப்-ரோடிங்கிற்காக ஃபெண்டர்-மவுன்டட் ஸ்நோர்கெல், 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்ஸ் மற்றும் 255/65 குட்இயர் ராங்லர் டயர்கள் கொடுத்துள்ளனர். பின்பக்கம் 'MAHINDRA' என எம்போஸ் செய்யப்பட்ட டெயில்கேட், LED டெயில்லேம்ப்ஸ், ஸ்டீல் ரிம் ஸ்பேர் வீல், லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளது. இந்த பிக்கப் டிரக், வேலி எடிஷன், ரீஃப் எடிஷன், டிரெயில் எடிஷன் என 3 ஸ்பெஷல் தீம்களில் கிடைக்கும். கலர் ஆப்ஷன்கள்: அக்வாரீஃப் (நீலம்), சஹாரா பெய்ஜ், ஆர்டெமிஸ் கிரே.
உட்புற விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்றாலும், டீசர்களின்படி இது ஒரு குளோபல் பிக்கப் லெவல் ஃபீச்சர்ஸுடன் வரும் என தெரிகிறது. ரிப்போர்ட்களின்படி, கேபினில் பெரிய போர்ட்ரெயிட்-ஓரியன்டட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் முக்கிய அம்சமாக இருக்கும்.
சென்டர் கன்சோலில் சில்வர் இன்செர்ட்ஸ், 4x4 சிஸ்டத்துக்கான ரோட்டரி டயல், பெரிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு & வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் இருக்கலாம்.
பாதுகாப்புக்கு, இந்த வாகனத்தில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) டெக்னாலஜி இருக்கலாம். 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESC, முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. 540-டிகிரி கேமரா சிஸ்டம் மூலம் வண்டியைச் சுற்றி இருக்கும் இடத்தை தெளிவாகப் பார்க்கலாம்.
இன்ஜின் ஆப்ஷன்கள்: 2.0-லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல்: 203 PS பவர், 380 Nm டார்க் (6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT, RWD). 2.2-லிட்டர் mHawk டீசல்: 175 PS பவர், 400 Nm டார்க் (6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT, RWD / 4WD).
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரை மும்பையில் உள்ள மஹிந்திரா இந்தியா டிசைன் ஸ்டுடியோவில் டிசைன் செய்து, சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் டெவலப் செய்துள்ளனர்.
மஹிந்திரா நிறுவனம் இந்த லைஃப்ஸ்டைலர் பிக்கப் டிரக்கின் விலையை 2027 ஏப்ரலில் அறிவிக்கும். இதன் ஆரம்ப விலை ரூ. 19.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். இது மார்க்கெட்டில் இசுஸு வி-கிராஸ், டொயோட்டா ஹைலக்ஸ் போன்ற வண்டிகளுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா போன்ற உலகளாவிய சந்தைகளை மஹிந்திரா குறிவைக்கிறது. 'சிறந்த செயல்திறனுடன், அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற டெக்னாலஜி மற்றும் பாதுகாப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த மாடலைக் கொண்டு வருகிறோம்' என மஹிந்திரா தரப்பில் கூறியுள்ளனர்.
இதே நேரத்தில், மஹிந்திரா தனது BE 6-SPORTEQ எலக்ட்ரிக் SUV சீரிஸையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் டெலிவரிகள் 2026 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தொடங்கும். லான்ச் எடிஷன், ஃபார்முலா இ ஃப்ரீடம் எடிஷன் மாடல்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.