Child Safety Car : குழந்தைகள் பாதுகாப்பில் No.1.. BNCAP-ல் அதிக மதிப்பெண் பெற்ற கார் இதுதான் தெரியுமா?

Published : May 11, 2026, 10:50 AM IST

குழந்தைகளின் பாதுகாப்பில் இந்த SUV செய்த சாதனை தற்போது இந்திய குடும்பங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. Crash Test-ல் கூட அசத்தலான மதிப்பெண் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த கார்.

PREV
15
குழந்தைகள் பாதுகாப்பு கார்

குடும்பத்துடன் பயணம் செய்யும் போது இந்திய வாடிக்கையாளர்கள் முதலில் கவனிக்கும் விஷயம் மைலேஜ் அல்ல, பாதுகாப்பு தான். குறிப்பாக குழந்தைகள் காரில் பயணம் செய்யும் காலத்தில், "இந்த கார் எவ்வளவு பாதுகாப்பானது?" என்ற கேள்வியே முக்கியமாக மாறியுள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில், குழந்தைகள் பாதுகாப்பில் அதிக மதிப்பெண் பெற்று கவனம் ஈர்த்துள்ளது கியா செல்டோஸ். இந்தியாவின் பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பான BNCAP பரிசோதனையில் இந்த எஸ்யூவி சிறப்பான வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

25
இந்தியாவின் பாதுகாப்பான எஸ்யூவி

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் மொத்தம் 49 மதிப்பெண்களில் 45 மதிப்பெண்கள் பெற்று கியா செல்டோஸ் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக டைனமிக் டெஸ்ட்-இல் முழு 24க்கு 24 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தை இருக்கை நிறுவல் பிரிவிலும் 12க்கு 12 மதிப்பெண்கள் பெற்றிருப்பது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மிகத் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன. குடும்பங்களின் தேவையை மையமாக வைத்து இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே வாகன நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

35
குடும்பங்களுக்கு சிறந்த எஸ்யூவி

18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தைகளுக்கான Dummy Crash Test-களிலும் கியா செல்டோஸ் சிறப்பாக செயல்பட்டது. முன்புற மோதல் மற்றும் பக்கவாட்டு மோதல் பரிசோதனைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டதாக BNCAP கூறுகிறது. இதனால், குழந்தைகளுடன் அடிக்கடி நீண்ட தூர பயணம் செய்பவர்களின் கவனம் தற்போது இந்த எஸ்யூவி மீது திரும்பியுள்ளது.

45
கியா செல்டோஸ் வசதிகள்

பாதுகாப்புடன், கியா செல்டோஸ் வடிவமைப்பு மற்றும் வசதிகளிலும் தனித்துவத்தைக் காட்டுகிறது. நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS தொழில்நுட்ப அம்சங்கள், பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இந்த எஸ்யூவி-I பிரீமியம் தரத்தில் நிறுத்தப்படுகின்றன. நகரப் பயணங்களுக்கும், நீண்ட ஹைவே டிரைவுகளுக்கும் ஏற்ற எஸ்யூவி என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.

55
கியா செல்டோஸ் விலை

இந்திய சந்தையில் கியா செல்டோஸ் எஸ்யூவி-யின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, ஸ்டைல், தொழில்நுட்ப வசதிகள் ஆகிய மூன்றையும் ஒரே காரில் எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. "குடும்ப பாதுகாப்பில் சமரசம் இல்லை" என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கியா செல்டோஸ் தற்போது ஒரு நம்பிக்கையான எஸ்யூவி ஆக உருவெடுத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories