டயர்களில் சரியான அளவு காற்று இருப்பது ரொம்ப அவசியம். டயர்கள் நல்லா இருந்தா மைலேஜ் அதிகமாகும், டிரைவிங்கும் பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக மழைக்காலத்தில் தேய்ந்துபோன டயர்கள் விபத்துக்கு வழிவகுக்கும். அதேபோல, பேட்டரியையும் ஒவ்வொரு 6 மாசத்துக்கும் ஒருமுறை செக் பண்ணுங்க. பேட்டரி வீக்கா இருந்தா, கார் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் வரும்.
வைப்பர்கள் சரியாக இருக்கிறதா?
ஏர் ஃபில்டர், கேபின் ஃபில்டர் அழுக்கா இருந்தால் இன்ஜின் செயல்பாடு குறையும், காருக்குள் வரும் காத்தும் சுத்தமாக இருக்காது. அதேபோல, ஹெட்லைட், இண்டிகேட்டர், பிரேக் லைட் எல்லாம் சரியா வேலை செய்கிறதா என்று பாருங்க. மழைக்காலத்தில் வைப்பர்கள் சரியா இல்லை என்றால் டிரைவிங் பண்றது ரொம்ப கஷ்டமாகிடும்.