கவாஸ்கி நிஞ்சா பைக்குகளுக்கு செம ஆஃபர்! சொளையா ரூ.35,000 டிஸ்கவுண்ட்!!

First Published | Nov 16, 2024, 9:33 AM IST

கவாஸாகி இந்தியா தனது பிரபலமான நிஞ்சா சீரிஸ் பைக்குகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி வழங்குகிறது. இந்த ஆண்டு இறுதி சலுகையில் நிஞ்சா பைக்குகளுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Kawasaki Ninja Series offer

கவாஸாகி இந்தியா தனது பிரபலமான நிஞ்சா சீரிஸ் பைக்குகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி வழங்குகிறது. இந்த ஆண்டு இறுதி சலுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஞ்சா பைக் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ.35,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பு காப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களைச் சேமிக்கவும் உதவும். இதனால் ஆன்-ரோடு விலை சற்று மலிவாக இருக்கும்.

Kawasaki Ninja 650

நின்ஜா 650, கவாஸாகியின் பிரபலமான மிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக். இது இப்போது ரூ.35,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.16 லட்சம். இப்போது ரூ.6.81 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 649சிசி பேரலல்-ட்வின் இன்ஜின், 68 ஹெச்பி பவரையும், 64 என்எம் டார்க்கையும் வழங்கும். இது ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

Tap to resize

Kawasaki Ninja 500

கவாஸாகியின் என்ட்ரி லெவல் நின்ஜா பைக் இது. நிஞ்ஜா 300 மாடல் ரூ.15,000 விலைக் குறைப்பைப் பெற்று, ரூ. 3.28 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 296சிசி பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த பைக் 40 ஹெச்பி மற்றும் 26 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த எஞ்சின் ஆறு-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டது.

Kawasaki Ninja 300

நிஞ்ஜா 500 ஒரு மிட் செக்மென்ட் பைக். இப்போது ரூ.10,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 5.14 லட்சமாகக் குறைகிறது. 46 ஹெச்பி மற்றும் 43 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 451சிசி பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாடல் ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது.

Latest Videos

click me!