அதுமட்டுமின்றி, இந்த சைக்கிளில் ரிமூவபிள் பேட்டரி கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 250 வாட்ஸ் முதல் 500 வாட்ஸ் ரிமூவபிள் பேட்டரி கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வசதியான ரைடுக்கு இதில் ஸ்மூத் ஆக்சிலரேஷன் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எக்கோ, நார்மல், ஸ்போர்ட் போன்ற மோட்ஸ்களை வழங்கியுள்ளனர். ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 3 முதல் 5 மணி நேரத்திலும், நார்மல் சார்ஜிங்கில் 6 முதல் 8 மணி நேரத்திலும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.