மானிய விலையில் மின்சார வாகனங்கள்; ரூ. 10,900 கோடி செலவில் புதிய திட்டம்!

Published : Sep 12, 2024, 12:32 PM ISTUpdated : Sep 12, 2024, 09:02 PM IST

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க PM E-Drive என்ற புதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 9 ஆண்டுகளாக இயங்கி வந்த FAME திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.  

PREV
16
மானிய விலையில் மின்சார வாகனங்கள்; ரூ. 10,900 கோடி செலவில் புதிய திட்டம்!
PM E-DRIVE vs FAME

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க PM E-Drive என்ற புதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 9 ஆண்டுகளாக இயங்கி வந்த FAME திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

26
PM E-DRIVE

இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10,900 கோடி மானியம் வழங்க வழங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், PM E-Drive திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

36
PM E-DRIVE subsidy

இந்தத் திட்டம் மின்சாரத்தில் இயங்கும் 24.79 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 பேருந்துகள் ஆகியவற்றுக்கு மானியம் கொடுக்கும். இந்த PM E-DRIVE திட்டம் 88,500 சார்ஜிங் மையங்களையும் ஆதரிக்கும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

46
Electric vehicle scheme

புதிய திட்டம் மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களை (EVs) ஊக்குவிக்க ரூ.3,679 கோடி மதிப்பிலான மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.

56
Electric vehicle subsidy

மாநில போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சியாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல இ-டிரக்குகளை ஊக்குவிக்கவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

66
Electric vehicle

இதற்கு முந்தைய ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கான FAME திட்டம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது. 2024 மார்ச் மாதத்துடன் அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது.

click me!

Recommended Stories