காரின் சன்ரூஃப், கதவுகளில் இருக்கும் சின்ன சின்ன வடிகால் ஓட்டைகளில் சில சமயம் தூசி அடைத்துக்கொள்ளும். இதனால் தண்ணீர் வெளியே போவதற்குப் பதிலாக, வாகனத்திற்குள்ளேயே சேர ஆரம்பிக்கும். அதே மாதிரி, கதவு, ஜன்னல்களில் இருக்கும் ரப்பர் சீல்களையும் செக் பண்ணுங்கள். அது டேமேஜ் ஆகியிருந்தால், மழைத் தண்ணீர் கேபினுக்குள் வர வாய்ப்பிருக்கிறது.
லைட்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சிஸ்டம்
ஹெட்லைட்ஸ், டெயில்லைட்ஸ், ஃபாக் லைட், இண்டிகேட்டர் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். மழைக்காலத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கும்போது, இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாதுகாப்பாக ஓட்ட முடியும். பழுதான பல்ப்புகளை மாற்றிவிடுங்கள். இந்த மாதிரி சின்ன சின்ன