எத்தனை வருஷமானாலும் உங்க பைக் புதுசாக ஜொலிக்க வேண்டுமா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!

Published : Oct 16, 2026, 04:33 PM IST

Bike Cleaning Tips: உங்கள் பைக் புத்தம் புதியது போல் ஜொலிக்க வேண்டுமா? பைக்கை கழுவும் முறையில் மாற்றம் வேண்டும். முறையான வாஷிங் ஷாம்பு மற்றும் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
13
எத்தனை வருஷமானாலும் பைக் புதுசாக ஜொலிக்க வேண்டுமா?

நாம் மிகவும் ஆசையாக வாங்கும் பைக்கை, அதன் தோற்றம் மங்காமல் பார்த்துக்கொள்வது பலரின் ஆசை. ஆனால், நாமும் அறியாமல் செய்யும் சில சிறிய தவறுகள்தான் வண்டியின் பொலிவையும் ஆயுளையும் சட்டெனக் குறைத்துவிடுகின்றன. பல மாதங்கள் கடந்தாலும் உங்கள் பைக் புத்தம் புதியது போல் ஜொலிக்க, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

வாஷ் செய்யும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்

தவறான சோப் பயன்பாடு: பாத்திரம் கழுவும் லிக்யூட் அல்லது துணி துவைக்கும் பவுடரைப் பயன்படுத்தி பைக்கைக் கழுவுவதுதான் பெரும்பாலானோர் செய்யும் முதல் தவறிது. இந்த கடுமையான ரசாயனங்கள் பைக்கின் மேலுள்ள பெயிண்ட் பாதுகாப்புப் படலத்தை அரித்து, வண்டியின் நிறம் மங்கச் செய்துவிடும்.

அதிக அழுத்த நீர்: பைக்கின் மீது அதிக பிரஷரில் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது இன்ஜின் பாகங்கள், எலக்ட்ரிக்கல் வயரிங், பேட்டரி மற்றும் மீட்டர் கன்சோல் போன்றவற்றை எளிதில் பழுதாக்கிவிடும்.

சூடான இன்ஜின்: பைக்கை இயக்கிவிட்டு வந்தவுடன், இன்ஜின் சூடு ஆறும் முன்பே தண்ணீர் ஊற்றுவது உலோகப் பாகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல, வெயிலில் பைக்கை நிறுத்திவிட்டு ஷாம்பு போட்டுத் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

23
பைக்கை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி?

எப்போதுமே பைக்கை ஒரு நிழலான பகுதியில் நிறுத்தி, இன்ஜின் நன்றாக ஆறிய பிறகே கழுவத் தொடங்க வேண்டும். பைக்குகளுக்கென பிரத்யேகமாக விற்கப்படும் ஷாம்புவை மட்டுமே தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சொரசொரப்பான பிரஷ்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

கழுவி முடித்தவுடன் சுத்தமான தண்ணீரில் முழுமையாக அலசிவிட்டு, உடனே ஒரு உலர்வான மெத்துணியால் துடைத்துவிட வேண்டும். மழையில் நனைந்தாலும் இந்த முறையைப் பின்பற்றுவது துருப்பிடிப்பதிலிருந்து பைக்கை பாதுகாக்கும்.

சைலன்சர் பாதுகாப்பு

புதிய தலைமுறை பைக்குகளில் எலக்ட்ரானிக் சென்சார்கள் அதிகம் உள்ளன. வாட்டர் வாஷ் செய்யும்போது சைலன்சர் துளைக்குள் தண்ணீர் செல்லாதவாறு துணியால் மூடிக்கொள்வது அவசியம். உள்ளே தண்ணீர் சென்றால் இன்ஜின் பற்றவைப்பு மற்றும் இயக்கத்தில் கோளாறு ஏற்படலாம். பைக்கின் செயினை சுத்தப்படுத்தி, பிரத்யேக செயின் லூப் போட்டு வந்தால், தேவையற்ற சத்தம் குறைவதுடன் வண்டியின் மைலேஜும் சீராக இருக்கும்.

பிரேக் டிஸ்க் மற்றும் டயர்களில் எந்தவித பாலிஷும் அல்லது எண்ணெயும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் பிரேக் பிடிக்கும் திறன் கடுமையாகப் பாதிக்கப்படும்.

33
பைக் பளபளப்பு மாறாமல் இருக்க...

பைக்கை முழுமையாக சுத்தம் செய்து காயவைத்த பிறகு, ஒரு தரமான வாக்ஸ் பாலிஷ் பயன்படுத்துவது நல்லது. இது வண்டிக்கு அழகான பளபளப்பைக் கொடுப்பதோடு, தூசியும் தண்ணீரும் எளிதில் ஒட்டாமல் பாதுகாக்கும் ஒரு கவசமாகச் செயல்படும். அதேசமயம், சீட், ஹேண்டில் பார் மற்றும் பிரேக் லீவர் பகுதிகளில் பாலிஷ் படாமல் பார்த்துக்கொள்வது வழுக்குவதைத் தவிர்க்கும்.

டீசல், பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் கொண்டு பெயிண்ட் உள்ள பகுதிகளைத் துடைக்கும் பழக்கத்தையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், உங்கள் பைக் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஷோரூமிலிருந்து வெளியே வாங்கியது போல பளபளப்பாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories