Published : Nov 02, 2024, 08:32 AM ISTUpdated : Nov 02, 2024, 08:39 AM IST
உங்கள் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் இதைத் தேர்வு செய்யலாம். ஹீரோ பிராண்ட் என்பதால் நம்பி வாங்கலாம். அதுவும் வெறும் 59 ஆயிரத்துக்கே கிடைக்கிறது.
இது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஃப்ளாஷ் எல்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.59,640. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. எனவே இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ் கூட தேவையில்லை. வாகனத்தைப் பதிவு செய்யவும் தேவையில்லை. ஸ்கூட்டருக்கு 3 வருட வாரண்டியும், பேட்டரிக்கு 1 வருட வாரண்டியும் உண்டு.
26
Hero Electric Flash Design
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது பேட்டரி சார்ஜிங் விவரங்களையும் வேகத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
36
Hero Electric Flash LX wheels
இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளது. எனவே, சாலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் கவலை இல்லாமல் பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரில் உள்ள அலாய் வீல்கள் வேகமாக ஓட்டுவதை எளிமை ஆக்குகிறது.
46
Hero Electric Flash LX Range
இந்த ஸ்கூட்டரில் பேட்டரி அளவு சிறியதாக உள்ளது. சார்ஜ் செய்வதும் எளிது, பேட்டரியை சுலபமாக வெளியே எடுக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம். பேட்டரியை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 100 முதல் 125 கிலோமீட்டர் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இதில் சக்திவாய்ந்த BLDC மோட்டார் உள்ளது.
56
Hero Electric Flash LX features
LED ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. இருளில் பிரகாசமான ஒளியைத் தருகிறது. போன் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளது. USB போர்ட்டும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் cruise control இல்லை என்பது ஒரு குறைதான். இருந்தாலும் குறைந்த பட்ஜெட்டில் மின்சார ஸ்கூட்டர் வாங்க இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
66
Hero Electric Flash LX EMI
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.63,073 ஆகும். ஆனால் ரூ.15,000 முன்பணம் செலுத்தி EMI முறையிலும் இந்த பைக்கை வாங்கலாம். மாதம் ரூ.1,544 வீதம் 36 மாதங்கள் EMI செலுத்த வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 9.7% ஆகும்.