பஜாஜ் ஆட்டோவின் ஆகஸ்ட் 2025 விற்பனை வெளிநாட்டு சந்தையில் 29% உயர்வு கண்டுள்ளது. மொத்த விற்பனையும் 5% அதிகரித்துள்ளது. கமர்ஷியல் வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது.
ஆகஸ்ட் 2025 பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு வெளிநாட்டு சந்தை பெரிய பலமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,43,977 யூனிட்கள் மட்டுமே எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட நிலையில், இம்முறை 29% அதிகரித்து 1,85,218 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்திய பைக்குகளுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதை இது காட்டுகிறது.
25
பஜாஜ் ஆட்டோ
இந்திய சந்தையிலும் பஜாஜ் தனது மொத்த விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்ட் 2024-இல் 3,97,804 யூனிட்கள் உயர்ந்த நிலையில், ஆகஸ்ட் 2025-இல் அது 4,17,616 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் 5% அதிகரிப்பு ஆகும். மேலும் ஜூலை 2025-இல் விற்ற 3,66,000 யூனிட்களை விடவும் சிறந்த வளர்ச்சி கடந்த ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
35
உள்ளூர் சந்தையில் வீழ்ச்சி
ஆனால் மொத்த விற்பனை உயர்ந்தாலும், இந்திய சந்தையில் பஜாஜ் சவாலை சந்தித்தது. உள்ளூர் விற்பனை 8% குறைந்து, 2,32,398 யூனிட்களாக சரிந்தது. குறிப்பாக இருசக்கர வாகன பிரிவில் 12% குறைவாக 1,84,109 யூனிட்கள் மட்டுமே விற்றன. இதன் மூலம் உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
வெளிநாட்டு சந்தையில் விற்பனை பெரிதும் உயர்ந்தது. இருசக்கர வாகன ஏக்ஸ்போர்ட் மட்டும் 25% அதிகரித்து 1,57,778 யூனிட்களை எட்டியது. கமர்ஷியல் வாகனங்களிலும் வளர்ச்சி உற்சாகமாக இருந்தது. உள்ளூர் விற்பனை 7% உயர்ந்து 48,289 யூனிட்களை எட்டியது, எக்ஸ்போர்ட் 58% உயர்ந்து 27,440 யூனிட்களை எட்டியது. இதன் மூலம் CV பிரிவின் மொத்த விற்பனை 21% அதிகரித்து 75,729 யூனிட்களைத் தொட்டது.
55
பஜாஜ் விற்பனை
நிதியாண்டு 2025-முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), பஜாஜ் மொத்தம் 18,94,853 யூனிட்கள் விற்றுள்ளது. இது கடந்தாண்டின் 18,54,029 யூனிட்களை விட 2% அதிகம். உள்ளூர் விற்பனை 9% வீழ்ச்சி கண்டாலும், 21% அதிகரித்த எக்ஸ்போர்ட் வளர்ச்சி அந்த வீழ்ச்சியை சமன்படுத்தியது. இதனால் உலக சந்தையின் தேவை பஜாஜ் வளர்ச்சிக்கு புதிய பலமாக அமைந்துள்ளது.