என்ஜின் டூ டயர் வரை: செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் முன் நீங்க கட்டாயம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Published : Oct 07, 2026, 03:09 PM IST

செகண்ட் ஹாண்ட் கார் வாங்கப் போகிறீர்களா? ஏமாறாமல் இருக்க நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய என்ஜின், டயர் மற்றும் ஆவணங்கள் பரிசோதனை குறித்து பார்போம்.

PREV
17
செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் போது நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இந்தியாவில் இப்போதெல்லாம் செகண்ட் ஹாண்ட் வாகனங்கள் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். புதிய கார்களின் விலை அதிகரித்துவிட்டதால், பல நடுத்தர குடும்பத்தினர் புதிய கார் வாங்குவதை விட ஏற்கனவே ஒருவர் உபயோகப்படுத்திய காரை குறைந்த விலையில் வாங்க விரும்புகின்றனர். விலைக் குறைவு மற்றும் கார் நன்றாக செட்டாகிவிடும் என்பதால் இந்த முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. நீங்களும் ஒரு பழைய கார் வாங்கும் யோசனையில் இருந்தால், வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

27
தேவை பட்டியல்

முதலில் கார் வாங்கும் முன் உங்களுக்கான தேவை என்ன என்பதை ஆராயவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கார் தேவைக்கான காரணம், அதிகம் ஓட்டும் இடம் மற்றும் உங்களது பட்ஜெட் ஆகியவற்றை நிர்ணயிக்கவும். காருக்கு எவ்வளவு உங்களால் செலவு செய்து பராமரிக்க முடியும், எவ்வளவு வசதிகள் வேண்டும் என்பதை யோசித்து, LUV, MUV, SUV அல்லது காம்பாக்ட் SUV என எந்த வகை கார் தேவை என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

37
கார் பரிசோதனை

செகண்ட் ஹாண்ட் கார் எல்லாம் புதிய காரைப் போல இருக்காது என்பதால், உரிமையாளர் சரியாகப் பராமரித்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். முடிந்த அளவு நன்றாக மெயின்டன் செய்த கார்களையே தேர்வு செய்யுங்கள். தேவைப்பட்டால் கார் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. 10 வருடங்களுக்கு மேல் ஆன கார்களை வாங்குவதைத் தவிர்க்கவும்; ஏனெனில் அவை அதிக பராமரிப்புச் செலவை வைக்கும். முடிந்த அளவு சிங்கிள் ஓனர் (Single Owner) பயன்படுத்திய காரை வாங்குவது நல்லது.

47
என்ஜின் சோதனை

செகண்ட் ஹாண்ட் கார்களில் மிக முக்கியமாக சோதனை செய்யவேண்டியது அதன் என்ஜின் ஆகும்.கார் எவ்வளவு ஓடியிருக்கிறது என்பதை கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் தெரிந்துகொள்ளுங்கள். வாங்கும் தேதி வரையிலான சர்வீஸ் ரெக்கார்டைக் கேட்டுப் பெற்று, என்ஜின் ஏதாவது சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். என்ஜின் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களின் கார் முதலீடு சரியாக அமையும் மற்றும் காரை நீண்ட காலம் உபயோகிக்க முடியும்.

57
ஸ்பீடோமீட்டர் பரிசோதனை (Odometer Check)

இந்த சோதனை மூலம் கார் எவ்வளவு கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்பதை அறியமுடியும்; சொல்லப்போனால் காரின் விலையே இதையே நம்பித்தான் இருக்கிறது.1 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் கார் ஓட்டியிருந்தால் முடிந்த அளவு விலையைக் குறைத்துக் கேளுங்கள். ஸ்பீடோமீட்டரை ரீசெட் செய்து அதன் உண்மையான ஓடோமீட்டர் கணக்கை பலர் மறைக்கின்றனர். எனவே, காரின் தயாரிப்பு நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அதைச் சோதனை செய்துகொள்ளுங்கள்.

67
இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் (Interior & Exterior)

காரின் உள் மற்றும் வெளிப்பக்கத்தை முழுமையாகச் சோதனை செய்துகொள்ளுங்கள்.நீங்கள் வாங்கும் கார் விபட்டுக்கு உள்ளாகி சில பகுதிகள் மாற்றப்பட்டிருக்கலாம். காரின் பாடி, டாஷ்போர்டு, சீட், ஏசி, டோர், பம்பர், ஹெட்லேம்ப் மற்றும் பெயிண்ட் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். கார் புதிதாகப் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தாலும், பெயிண்ட் தேய்மானம் அதிகம் இருந்தாலும், அல்லது முக்கிய பாகங்கள் சேதமடைந்திருந்தாலும் விலையைக் குறைத்துக் கேளுங்கள்.

கார் வாங்கும் முன்பு பலர் மறப்பது டயர் நன்றாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுதான். ஒரு கார் நன்றாக ஓடவேண்டுமானால் அதன் டயர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு காரின் டயர் விலை ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும். டயர் தேய்மானம் அதிகம் இருந்தால் வாங்கி சில நாட்களில் மாற்றவேண்டியிருக்கும், இது உங்கள் காரின் பட்ஜெட்டை அதிகரிக்கும்.

சில கார்களில் போலியாக கிரிப் ஏற்படுத்தி புதிய டயர் போல மாற்றுவார்கள் என்பதால், கிரிப் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைத் துல்லியமாகப் பரிசோதனை செய்யுங்கள்.

77
ரெகார்ட் & இன்சூரன்ஸ் (Records & Insurance)

கார் வாங்கும் முன்பு அந்த காரின் ஆவணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.நீங்கள் வாங்கும் கார் கடனில் (Loan) இருக்கிறதா, உரிமையாளர் விவரம் சரியாக இருக்கிறதா, கம்பெனி சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா, இன்சூரன்ஸ் இருக்கிறதா, விபத்து வழக்குகளில் சிக்கியுள்ளதா என்பதையெல்லாம் ஒருமுறை முழுமையாகச் சோதனை செய்யுங்கள். இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த காரை வாங்குவதற்கான இறுதி முடிவை எடுக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories