உங்கள் பைக் நிறுவனம் வழங்கிய கையேட்டின் படி, இரண்டு டயர்களிலும் காற்று சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பைக்கிற்கும் டயர் அழுத்தம் மாறுபடும். முன்பக்க மற்றும் பின்பக்க டயர்களுக்கான சரியான PSI அளவை மேனுவல பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நிழலில் நிறுத்துங்கள்
முடிந்தவரை பைக்கை நிழலில் பார்க் செய்யுங்கள். நேரடியாக வெயில் படும் இடங்களைத் தவிர்க்கவும். வெயில் டயரின் ஆயுளைக் குறைத்துவிடும். வெயிலில் பைக்கை நிறுத்தினால், டயரில் சிறிய விரிசல்கள் ஏற்படுவதைக் காண முடியும். எனவே, பைக்கை கவர் போட்டு மூடி வையுங்கள் அல்லது குளிர்ந்த இடங்களில் பார்க்கிங் செய்யுங்கள்.
மென்மையான பயணம்
பைக்கை திடீரென வேகப்படுத்த ஆக்சிலரேட்டரை கடுமையாக முறுக்காதீர்கள். இதனால் பின் சக்கரம் அதிவேகமாக சுழன்று, டயர் ரப்பர் சீக்கிரமாகத் தேய்ந்துவிடும். திடீர் பிரேக் அடிப்பதும் தவறான செயலாகும். பைக்கை எப்போதும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இயக்குங்கள்.
சாலையைக் கவனியுங்கள்
ஆஃப்-ரோடு பாதைகளில் வண்டி ஓட்டும்போது டயர்கள் விரைவில் தேய்ந்துவிடும். முடிந்தவரை முறையாக பராமரிக்கப்பட்ட நல்ல சாலைகளில் மட்டும் வாகனத்தை ஓட்டுங்கள்.
வீல் அலைன்மென்ட் சரிபார்த்தல்
பைக் மேனுவலில் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு சக்கரங்களுக்கும் வீல் அலைன்மென்ட் சரியான அளவில் உள்ளதா என பரிசோதிக்கவும். அலைன்மென்ட் தவறாக இருந்தால் டயரின் ஆயுள் விரைவாகக் குறைந்துவிடும்.