ரூ.70,000க்குள் அதிக மைலேஜ் தரும் பைக்குகள்.. பெட்ரோல் விலை உயர்ந்தாலும் கவலை வேண்டாம்

Published : Mar 08, 2026, 09:25 AM IST

இந்திய சந்தையில் குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் கம்யூட்டர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சுமார் ரூ.70,000 விலையில் கிடைக்கும் பைக்குகள், தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

PREV
15
அதிக மைலேஜ் தரும் பைக்குகள்

குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பைக் வாங்க வேண்டும் என்றால் இந்திய சந்தையில் பல நல்ல தேர்வுகள் கிடைக்கின்றன. குறிப்பாக தினசரி அலுவலகம் அல்லது கல்லூரி செல்லும் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் கம்யூட்டர் பைக்குகள் 100cc முதல் 110cc வரை எஞ்சினுடன் வருகிறது. இவை குறைந்த விலையில் கிடைப்பதோடு, எரிபொருள் சேமிப்பிலும் சிறந்தது என்பதால் பலரும் விரும்பும் தேர்வாக உள்ளது. சுமார் ரூ.70,000 வரை பட்ஜெட்டில் கூட நல்ல மைலேஜ் தரும் சில பைக்குகளை வாங்க முடியும்.

25
குறைந்த விலை பைக்குகள்

பட்ஜெட் பைக்குகளை தேர்வு செய்யும்போது பலரும் முதலில் பார்க்கும் விஷயம் மைலேஜ் தான். குறிப்பாக பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும் சூழலில், 60 முதல் 70 கிமீ வரை மைலேஜ் தரும் பைக்குகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. அதனால் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் தினசரி பயணத்திற்கு ஏற்ற வகையில் எரிபொருள் சிக்கனமாக செயல்படும் பைக்குகளை தயாரித்து வருகின்றன. இவை பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் என்பதும் கூடுதல் நன்மை.

35
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்

இந்த பட்டியலில் டிவிஎஸ் ஸ்போர்ட் மிகவும் பிரபலமான பட்ஜெட் கம்யூட்டர் பைக்காகும். இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.55,500 முதல் தொடங்குகிறது. 109.7cc எஞ்சின் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற அளவில் சக்தி அளிக்கிறது. மேலும் எரிபொருள் சிக்கனத்தில் சிறப்பாக இருக்கும் இந்த பைக் சராசரியாக சுமார் 70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. இதனால் குறைந்த செலவில் அதிக பயன் தரும் வாகனமாக இது பார்க்கப்படுகிறது.

45
ஹோண்டா ஷைன் 100

மேலும் ஹோண்டா ஷைன் 100 இந்திய சந்தையில் விரைவாக பிரபலமான மற்றொரு குறைந்த விலை பைக் ஆகும். இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.65,000 அளவில் உள்ளது. 98cc எஞ்சினுடன் வரும் இந்த பைக் மென்மையான ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. தினசரி வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

55
தினசரி பயண பைக்

மைலேஜ் குறித்து பார்க்கும்போது ஹோண்டா ஷைன் 100 சுமார் 55 கிமீ வரை மைலேஜ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறைந்த விலை, நம்பகமான செயல்திறன் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதால் இந்த வகை கம்யூட்டர் பைக்குகள் இந்தியாவில் தொடர்ந்து நல்லது வரவேற்பைப் பெற்று வருகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் எரிபொருள் சிக்கனமான பைக் தேடுபவர்களுக்கு இவை சிறந்த தேர்வாக இருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories