பெட்ரோல், டீசல் விலை உயர்வால் CNG கார்களின் தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவில் சிஎன்ஜி கார்களக்கான மவுசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரூ.9 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த CNG கார்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ரூ.8 லட்சத்தில் 28 கிமீ மைலேஜ்: ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த CNG கார்கள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் CNG கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், CNG கார்களின் தேவை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலை விட CNG விலை குறைவு. மேலும், இந்த கார்கள் அதிக மைலேஜ் தருகின்றன. ரூ.9 லட்சத்துக்குள் இந்திய சந்தையில் கிடைக்கும் மூன்று சிறந்த CNG கார்களைப் பற்றிப் பார்ப்போம்.
24
சிறந்த மைலேஜ் கார்கள்
மாருதி சுசூகி ஃப்ரோன்க்ஸ் CNG
மாருதி ஃப்ரோன்க்ஸ் சிக்மா CNGயில் 1197cc நான்கு சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இந்த எஞ்சின் 6000 rpmல் 76.43 bhp பவரையும் 4300 rpmல் 98.5 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, ஒரு கிலோ CNGயில் 28.51 கிமீ (28.51 கிமீ/கிலோ) ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.46 லட்சம்.
34
பட்ஜெட் கார்கள்
டாடா பஞ்ச் பியூர் CNG
டாடா பஞ்ச் ஒரு மைக்ரோ SUV பிரிவு கார். இது ஐந்து நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. டாடா பஞ்சில் 1.2L (1199cc) Revotron எஞ்சின் உள்ளது, இது 6000 rpmல் 72.5 bhp பவரையும் 3250 rpmல் 103 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, ஒரு கிலோ CNGயில் 26.99 கிமீ (26.99km/kg) ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.23 லட்சம்.
44
அதிக மைலேஜ் தரும் கார்
ஹூண்டாய் எக்ஸ்டர் S CNG
ஹூண்டாயின் கிராஸ்ஓவர் SUVதான் எக்ஸ்டர். இது மிகவும் விசாலமான கார். காரின் எஞ்சினைப் பற்றி கூறுவதானால், 6000 rpmல் 67.72 bhp பவரையும் 4000 rpmல் 95.2 Nm டார்க்கையும் உருவாக்கும் 1197cc எஞ்சின் உள்ளது. மைலேஜைப் பொறுத்தவரை, ஒரு கிலோ CNGயில் 27.1 கிமீ (27.1km/kg) ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.43 லட்சம்.