
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதுடன் தங்களது நீண்ட நாள் கனவான சொந்த வாகனத்தை வாங்குவதற்கும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரும் எளிய மக்களும் இந்தத் தீபாவளித் திருநாளைப் பயன்படுத்தி புதிய பைக் வாங்கத் திட்டமிடுவது வழக்கம். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளைத் தேடுபவர்களுக்காக, ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 சூப்பர் பைக்குகளின் விவரங்களை பற்றி பார்போம்.
குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மிகச்சிறந்த பைக் இதுவாகும். இதன் எடையற்ற மற்றும் கச்சிதமான வடிவமைப்பு, நெரிசலான நகரச் சாலைகளில் மிக எளிதாக ஓட்டிச் செல்ல பெரிதும் உதவுகிறது.
மைலேஜ் - ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 80 கி.மீ வரை சான்றளிக்கப்பட்ட மைலேஜும், வழக்கமான சாலைகளில் சுமார் 70 கி.மீ வரையிலும் மைலேஜ் தரும்.
விலை - இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 59,100 முதல் ரூ. 59,950 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அம்சங்கள் - இதில் 109.7 சிசி என்ஜின், 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 112 கிலோ எடை கொடுக்கப்பட்டுள்ளது.
நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களிடையே மிகவும் பிரபலமான பைக் இது. எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தாலும் முதுகு வலி அல்லது இடுப்பு வலி வராதபடி, மிக மென்மையான சஸ்பென்ஷன் (Suspension) அமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் - ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 75 கி.மீ வரை சான்றளிக்கப்பட்ட மைலேஜ் வாரி வழங்குகிறது.
விலை - இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 70,511 ஆகும்.
அம்சங்கள் - இதில் 99.59 சிசி திறன் கொண்ட என்ஜின், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பெட்ரோல் டேங்க் மற்றும் 117 கிலோ எடை அமையப் பெற்றுள்ளது.
கரடுமுரடான மண் சாலைகளிலும், கிராமப்புறப் பகுதிகளில் அதிக சுமைகளை ஏற்றிச் செல்வதற்கும் ஏற்ற வலுவான மற்றும் ரக்கடான (Rugged) பாடி அமைப்புடன் வடிவமைக்கப்பட்ட பைக் இதுவாகும்.
மைலேஜ் - ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 70 கி.மீ வரை சான்றளிக்கப்பட்ட மைலேஜும், அன்றாட பயன்பாட்டில் சுமார் 60 முதல் 70 கி.மீ வரையிலும் மைலேஜ் தருகிறது.
விலை - இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 74,930 ஆகும்.
அம்சங்கள் - இதில் 115.45 சிசி பவர்ஃபுல் என்ஜின், 11 லிட்டர் பெரிய பெட்ரோல் டேங்க் மற்றும் 124 கிலோ எடை பொருத்தப்பட்டுள்ளது.
எளிய மக்களின் பட்ஜெட்டில் சற்றே கூடுதல் ஸ்டைல், பிரீமியம் லுக் மற்றும் பாதுகாப்பை விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும். இதில் முன்பக்க டிஸ்க் பிரேக் தேர்வுடன் கூடுதல் பிரேக்கிங் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மைலேஜ் - ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 70 கி.மீ வரை சிறந்த மைலேஜ் கொடுக்கிறது.
விலை - இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 72,500 முதல் ரூ. 75,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அம்சங்கள் - இதில் 109.7 சிசி என்ஜின், 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 115 கிலோ எடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நம்பகமான மற்றும் அதிகம் விற்பனையாகும் இந்த லெஜெண்டரி பைக் இல்லாமல் பட்ஜெட் பைக்குகளின் பட்டியலே முழுமையடையாது. குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் எப்போது எங்கு விற்றாலும் நல்ல ரீசேல் வேல்யூ (Resale Value) தருவது இதன் மிகப்பெரிய பலமாகும்.
மைலேஜ் - ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 70 முதல் 73 கி.மீ வரை மைலேஜ் வழங்குகிறது.
விலை - இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 75,000 முதல் ரூ. 79 என்பகளுக்குள் தொடங்குகிறது.
அம்சங்கள் - 97.2 சிசி i3S தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் மற்றும் 9.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.