334cc இன்ஜின், கேன்டிலீவர் சீட், மாஸ் லுக்... ரூ.2.08 லட்சத்தில் களமிறங்கிய ‘ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ்’!

Published : Oct 25, 2026, 07:55 PM IST

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜாவா 42 பாபர் பைக்கின் புதிய 'ஆல் ஸ்டார்ஸ் எடிசன்' (All Stars Edition) மாடலை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

PREV
14
புதிய ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ் எடிசன்

சிங்கிள் சீட் அமைப்புடன் வடிவமைக்கப்படும் 'பாபர்' (Bobber) வகை மோட்டார்சைக்கிள்கள் மேலை நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை. குறிப்பாகப் பிரீமியம் ரக பைக்குகளில் இந்த விசித்திரமான ரசனை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதே ரசனை கொண்ட இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் ஏற்கெனவே 'ஜாவா 42 பாபர்' பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மாடலை மேலும் தனித்துவமாக்கும் வகையில் ஜாவா 42 பாபரின் புதிய ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற ‘குளோபல் செஸ் லீக் 2026’ (Global Chess League 2026) நிகழ்வில், ‘ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ் எடிசன்’ (Jawa 42 Bobber All Stars Edition) என்ற பெயரிலான இந்த புதிய மாடலை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துவைத்தார். மேலும், ஜாவா 'ஆல் ஸ்டார்ஸ்' வரிசையில் 'ஸ்ட்ரைக் டூ' (Strike Two) என்ற 2-வது பதிப்பு என அந்நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாபர் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த ஜாவா 42 பாபர் ஆல் ஸ்டார்ஸ் எடிசன், அதன் தனித்துவமான கேன்டிலீவர் சீட் (Cantilever Seat) அமைப்பு மற்றும் பின்புற மோனோஷாக் அப்சார்பர் காரணமாகச் சந்தையில் பிற பைக்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கம்பீரத் தோற்றத்தைப் பெற்றுள்ளது.

24
ஆல் ஸ்டார்ஸ் எடிசன்: தோற்றம் & வண்ணங்கள்

புதிய ஆல் ஸ்டார்ஸ் பதிப்பில் 42 Bobber-ன் அடிப்படை வடிவமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யாமல், அதன் தனித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய வண்ணத் தேர்வுகள், செக்கர்டு கிராபிக்ஸ் (Chequered Graphics) டிசைன் மற்றும் 'All Stars' முத்திரை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கப் புதிய வண்ணங்களில் ஒன்றாக 'ஆல் ஸ்டார்ஸ் சில்வர் நைட்' (All Stars Silver Knight) அறிமுகமாகியுள்ளது.

மோட்டார்சைக்கிள் உலகிலும் செஸ் விளையாட்டிலும் காணப்படும் செக்கர்டு கிராபிக்ஸ் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த வண்ணத் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு வண்ணத்தைக் கொண்ட 'ஆல் ஸ்டார்ஸ் ஷேடோ பிளாக்' (All Stars Shadow Black) வண்ணத் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

34
எஞ்சின் & செயல் திறன்

புதிய ஜாவா ஆல் ஸ்டார்ஸ் 42 பாபர் மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 334cc லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் 7,500 rpm-ல் அதிகபட்சமாக 29.9 பிஎஸ் பவரையும், 5,500 rpm-ல் 30.01 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் (EFI) வசதியுடன் வரும் இந்த எஞ்சின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டபுள் க்ரேடில் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 35மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளன. முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் (Dual Channel ABS) பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 100/90-18 அளவிலான டயரும், பின்புறத்தில் 140/70 R17 அளவிலான டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

அளவீடுகள் & பரிமாணங்கள்

எடை: 177 கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 12.5 லிட்டர்

வீல் பேஸ்: 1,485 மிமீ

சீட் உயரம்: 740 மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 145 மிமீ

44
விலை & கூடுதல் சலுகைகள்

புதிய ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிசன் ரூ.2,08,942 விலையிலிருந்து தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பல்வேறு கூடுதல் சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

4 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ உத்தரவாதம் (Warranty)

6 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி (Extended Warranty)

8 ஆண்டுகள் வரை சாலை அவசர உதவி திட்டம் (Roadside Assistance)

5 ஆண்டுகள் வருடாந்திர பராமரிப்புத் திட்டம் (Annual Maintenance Contract)

நாடு முழுவதும் உள்ள ஜாவா நிறுவனத்தின் 450-க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories