Low Budget Cars: ரூ.3.50 லட்சம் முதல் கார்கள்! பட்ஜெட் கார்கள் லிஸ்ட் இதோ!

Published : Nov 28, 2026, 09:54 PM IST

Low Budget Cars: கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் பட்ஜெட் ரூ.5 லட்சத்திற்குள் மட்டும்தானா? கவலை வேண்டாம். இதில் சில மாடல்கள் 25 கி.மீ வரை மைலேஜ் வழங்குகின்றன. விலை, பாதுகாப்பு வசதிகள், இன்ஜின் உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கலாம்.

PREV
14
குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகள்

குறைந்த விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் கவனத்தை ஈர்க்கும் மாடல்களில் ஒன்று மாருதி சுசுகி ஆல்டோ K10. இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.69 லட்சம். 998 சிசி பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்தக் கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிகளில் கிடைக்கிறது. மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.39 கி.மீ, ஏஎம்டி மாடல் 24.90 கி.மீ மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. சில வேரியண்ட்களில் தொடுதிரை வசதியும் கிடைக்கிறது.

24
மாருதி எஸ்-பிரஸ்ஸோ: 25 கி.மீ மைலேஜ்

எஸ்யூவி போன்ற தோற்றம் கொண்ட சிறிய காரை விரும்புபவர்களுக்கு மாருதி எஸ்-பிரஸ்ஸோ மற்றொரு தேர்வாகும். இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.49 லட்சம். 998 சிசி பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்தக் கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிகளில் கிடைக்கிறது. மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.76 கி.மீ வரையும், ஏஎம்டி மாடல் 25.30 கி.மீ வரையும் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. அடிப்படை வேரியண்ட்களில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் போன்ற வசதிகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் டச்ஸ்க்ரீன் வசதியும் வழங்கப்படுகிறது.

34
சிறிய காரில் அதிக இடவசதி

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார், பட்ஜெட் விலையில் வேறுபட்ட வடிவமைப்பை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.52 லட்சம். 999 சிசி பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்தக் கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு சுமார் 21.46 கி.மீ மைலேஜ் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 279 லிட்டர் பூட் வசதி, 184 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். அடிப்படை மாடலில் இரண்டு ஏர்பேக்குகள் உள்ளன. அதிக விலை கொண்ட கிளைம்பர் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன.

44
6 ஏர்பேக்குகளுடன் குடும்ப கார்

ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் மற்றொரு முக்கியமான தேர்வு டாடா டியாகோ. இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.77 லட்சம். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்தக் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 85 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விசாலமான கேபின், குடும்பப் பயணத்துக்கு ஏற்ற வடிவமைப்பு போன்றவையும் இதன் சிறப்பம்சங்கள். ஆனால், இதன் அடிப்படை வேரியண்ட் மட்டுமே ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories