Kia India Price Hike : மாருதி சுசுகி இந்தியா சமீபத்தில் விலை உயர்வு அறிவித்ததைத் தொடர்ந்து, கியா இந்தியாவும் இதைப் பின்பற்றி, அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய வாகன உற்பத்தியாளர் ஆன கியா தனது அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.திருத்தப்பட்ட விலைகள் ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வருவதால், இந்த நடவடிக்கை வாங்குபவர்களுக்கு ஒரு பின்னடைவாகும். இதன் மூலம், பல்வேறு சந்தை சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்தும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் பட்டியலில் கியா இந்தியாவும் இணைகிறது.