ரூ. 6 லட்சத்தில் 7 சீட்டர் கார்களா? இந்த தீபாவளிக்குக் குடும்பத்தோடு பயணிக்க டாப் 5 ஆப்ஷன்கள்!

Published : Oct 14, 2026, 04:35 PM IST

இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பெரிய குடும்பங்கள் ஒன்றாகச் செல்ல ஏற்ற, மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த 7-சீட்டர் கார்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

PREV
16
ரூ. 6 லட்சத்தில் கூட கிடைக்கும் 7-சீட்டர் கார்கள்

காம்பேக்ட் MPV கார்கள் முதல் கரடுமுரடான பழைமையான SUV கார்கள் வரை இந்த 7 இருக்கை கார்களும் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்லப் பல்வேறு சிறப்பான வழிகளை வழங்குகின்றன.

இந்தியாவில் சாலைப் பயணங்கள் என்று வந்துவிட்டாலே 7-சீட்டர் கார்கள் வழங்கும் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் சௌகரியத்திற்கும் ஈடு இணையே இல்லை. வீட்டில் ஏழு பேர் இல்லை என்றாலும் கூட 3 வரிசை சீட்களைக் கொண்ட கார் வழங்கும் தாராளமான இடவசதி மற்றும் ஃப்ளெக்ஸிபிலிட்டி வேறு எந்த காரிலும் கிடைக்காது.

பொதுவாகக் கூடுதல் சீட்கள் கொண்ட பெரிய காரை வாங்க வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல சிறிய அளவிலான கார்களிலேயே 7 சீட்களை நேர்த்தியாகக் கொண்டு வந்த பல கார்களும் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பெரிய கார்களும் இன்று சந்தையில் உள்ளன. அந்த வகையில் இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நீங்கள் வாங்கக்கூடிய இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 'டாப் 5' 7-சீட்டர் கார்களின் பட்டியலை பற்றி பார்ப்போம்.

26
நிஸான் கிராவிட்

விலை - ரூ. 5.73 லட்சம் முதல் 9.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

எரிபொருள் ஆப்ஷன்கள் - பெட்ரோல்

இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 7-சீட்டர் கார் நிஸான் கிராவிட் ஆகும். இது உண்மையில் ரெனால்ட் டிரைபர் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகும். டாடா நெக்ஸான் ஹூண்டாய் வென்யூ போன்ற 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களின் அளவிலேயே, 7 சீட்களை இது மிகச் சிறப்பாகப் பேக் செய்துள்ளது. இதன் 3-வது வரிசை பெரியவர்களுக்குச் சற்றே நெருக்கடியாக இருந்தாலும், 2-வது வரிசை சீட்களை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்த்தும் வசதி இருப்பதால் ஓரளவிற்குச் சமாளிக்க முடியும். மேலும் 2 மற்றும் 3-வது வரிசை சீட்களை மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.

36
ரெனால்ட் டிரைபர்

விலை - ரூ. 5.81 லட்சம் முதல் 9.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

எரிபொருள் ஆப்ஷன்கள் - பெட்ரோல்

தனது ரீ-பேட்ஜ் சகோதரரான நிசான் கிராவிட் வருவதற்கு முன்பு வரை ரெனால்ட் டிரைபர் தான் இந்தியாவின் மலிவு விலை 7-சீட்டர் காராக இருந்தது. 2019-ல் அறிமுகமான இந்த கார் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்றது. இதில் சேர்க்கப்பட்ட டர்போ-பெட்ரோல் என்ஜின் இதன் செயல்திறனை மேலும் சிறப்பாக்கியுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் பயன்பாடு சௌகரியம் மற்றும் தினசரி அத்தியாவசிய வசதிகளை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு டிரைபர் ஒரு மிகச்சிறந்த ஆப்ஷனாகும். இதில் விரைவில் சிஎன்ஜி (CNG) மாடலையும் ரெனால்ட் கொண்டுவரவுள்ளது.

46
மஹிந்திரா பொலேரோ

விலை - ரூ. 8.49 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

எரிபொருள் ஆப்ஷன்கள் - டீசல்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல தலைமுறைகளாகக் கொடிகட்டிப் பறக்கும் பெயர் மஹிந்திரா பொலேரோ. நகரத்துக் குடும்பங்களுக்கு இது முதல் தேர்வாக இருக்காது என்றாலும் கிராமப்புறங்களில் இதற்கு இணையான ஒரு உழைப்பாளி கார் எதுவுமில்லை. சமீபத்திய அப்டேட்களில் லெதரெட் சீட்கள் போன்ற சில வசதிகளைப் பெற்றிருந்தாலும் இது பயன்பாட்டிற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஒரு ரக்டு லேடர்-பிரேம் SUV ஆகும்.

இதில் 7 சீட்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் இதன் 3-வது வரிசையில் பக்கவாட்டில் அமரும் 'ஜம்ப் சீட்கள்' மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இவை நீண்ட பயணங்களுக்குச் சௌகரியமாக இருக்காது. மேலும் சீட்பெல்ட் வசதியும் இல்லாததால் பாதுகாப்பு குறைவே. இருந்தாலும் குறைந்த விலையில் 7 சீட் வசதி கொண்ட கார்களின் பட்டியலில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

56
மாருதி எர்டிகா

விலை - ரூ. 8.90 லட்சம் முதல் ரூ. 13.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

எரிபொருள் ஆப்ஷன்கள் - பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி

5 பேருக்கும் அதிகமானோருடன் கேப் பயணம் செய்திருந்தால், நிச்சயம் நீங்கள் மாருதி எர்டிகாவில் பயணித்திருப்பீர்கள். நியாயமான விலையில் 3 வரிசை சீட்களை வழங்கி, பல ஆண்டுகளாக இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்ற காராக இது திகழ்கிறது.

நவீன கார்களுடன் ஒப்பிடும்போது இதில் வசதிகள் சற்று குறைவாகத் தோன்றினாலும், ஒரு குடும்ப MPV காரிற்குத் தேவையான சௌகரியம், இடவசதி, என்ஜின் மென்மை மற்றும் மைலேஜ் ஆகியவற்றில் எர்டிகாவை அடித்துக் கொள்ள முடியாது. மாருதியின் பரவலான சர்வீஸ் நெட்வொர்க்கும் சேரும்போது, இது ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வாக மாறுகிறது.

66
மஹிந்திரா பொலேரோ நியோ

விலை - ரூ. 9.06 லட்சம் முதல் ரூ. 10.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

எரிபொருள் ஆப்ஷன்கள் - டீசல்

வழக்கமான பொலேரோவின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக மஹிந்திரா பொலேரோ நியோவைக் கருதலாம். ரியர்-வீல் டிரைவ் மற்றும் சக்திவாய்ந்த டீசல் இன்ஜினுடன் அதே அளவிலான கரடுமுரடான தன்மையைக் கொண்டிருந்தாலும் நவீன குடும்பங்கள் வாங்கும் வகையில் இதன் கேபின் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இதன் 3-வது வரிசையிலும் வழக்கமான முன்பக்கம் பார்க்கும் இருக்கைகளுக்குப் பதிலாகச் சீட்பெல்ட் இல்லாத ஜம்ப் சீட்களே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதை முழுமையான 7-சீட்டராகக் கருத முடியாது. எப்போதாவது மட்டுமே 3-வது வரிசையை பயன்படுத்துபவர்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் செல்லக்கூடிய திறன்மிக்க கார் தேவைப்படுபவர்களுக்கும் மட்டுமே இது உகந்தது. மற்ற தேவைகளுக்குப் பட்டியலில் உள்ள பிற கார்களே சிறந்தது. மேலும், 9 இருக்கைகள் கொண்ட 'பொலேரோ நியோ பிளஸ்' மாடலும் மஹிந்திராவிடம் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories